- · 5 friends
-
I
தொப்பி
இமயமலை அடிவாரத்தில் ஒரு மடம். அங்கே ஒரு சன்னியாசி இருந்தார்.
அவரிடம் ஒருவன் வந்தான்.
சுவாமி ஆசையை உதற நினைக்கிறேன் முடியவில்லை ஒட்டிக் கொண்டே வருகிறது என்றான்.
இப்படி உட்கார் ஒரு கதை சொல்கிறேன் என்றார்
சன்னியாசி.
ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான்.
அவன் பெயர் குப்புசாமி.
அவனிடம் எப்போதும் ஒரு பழைய தொப்பி இருக்கும்.
அதனால் அவனை தொப்பிசாமி என்றுதான் எல்லோரும் சொல்வது வழக்கம்.
ஒரு புது தொப்பி வாங்கக் கூடாதா என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள்.
பணத்துக்கு எங்கே போவேன் என்பான்.
பணம் வைத்திருக்கிறான்.
செலவு பண்ண மனசு இல்லை.
மகா கஞ்சன்.
பழைய பொருள்களை எல்லாம் வாங்கி விற்றுக் கொண்டிருந்தான்.
அப்படி ஒரு தடவை பழைய கண்ணாடி பொருட்களை எடுக்கும்போது அதில் ஒரு அருமையான சென்ட் பாட்டில் கிடைத்தது.
உடனே ஒரு ஐடியா செய்தான்.
அதை சின்ன சின்ன போத்தல்களில் அடைத்து ஜன்னல் ஓரமாக அடுக்கி வைத்து விட்டான்.
அதை விற்றால் நிறைய பணம் கிடைக்குமே.
இதற்கிடையில் ஒரு நாள் அவன் நண்பன் வந்தான்.
என்னடா உன் பழைய தொப்பியை மாற்றக் கூடாதா ஊரில் எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்றான்.
சென்ட் பாட்டில் விற்றதும் பணம் வரும்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.
சரி வா நீச்சல் குளத்துக்கு போய் வருவோம் என்று கூப்பிட்டான்.
நண்பர்கள் இரண்டு பேரும் போனார்கள்.
அதே நேரம் அந்த ஊர் நீதிபதியும் அங்கே குளிக்க வந்தார்.
அவரிடம் இருந்த விலை உயர்ந்த புது தொப்பியை் அங்கிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு குளிக்க போனார்.
இதற்கிடையில் குப்புசாமி குளித்துவிட்டு வந்தான் அவனுடைய பழைய தொப்பியை காணவில்லை.
அந்த புது தொப்பியை பார்த்தான்.
இது நண்பனுடைய வேலை என்று புரிந்து கொண்டு அதை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
நீதிபதி குளித்துவிட்டு வந்து பார்க்கிறார் தொப்பியை காணவில்லை.
போலீசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் வந்துவிட்டார்கள் .
அங்கே ஒரு மூலையில் பழைய தொப்பி கிடைத்தது.
அடடா இது குப்புசாமி தொப்பி.
அவன் வீட்டுக்கு போனார்கள்.
தொப்பி அங்கேயே இருந்தது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டார்கள்.
கட்டிவிட்டு வந்தான்.
பழைய தொப்பி கண்ணில் பட்டது. உன்னால் தான் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று சொல்லி அதை எடுத்துக்கொண்டு போனான்.
அந்த ஊர் குளத்தில் வீசி எறிந்துவிட்டு வந்தான்.
அது மீன் பிடிக்கிற ஒருவன் கையில் சிக்கிக் கொண்டது.
வருகின்ற வழியில் அதை எடுத்து வேகமாக வீசி எறிந்தான்.
அது நேராக குப்புசாமி வீட்டு ஜன்னல் வழியே உள்ளே வந்து போத்தல்கள் மேல் விழுந்து எல்லாம் உடைந்து நொறுங்கியது.
குப்புசாமி தோட்டத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினான்.
தொப்பியை போட்டான்.
மூடிவிட்டான்.
இதை அடுத்த வீட்டுக்காரன் பார்த்தான் ஏதோ புதையல் வைத்திருக்கிறான் என்று போலீசில் புகார் கொடுத்தான்.
மறுபடியும் போலீஸ் தோண்டினார்கள் .
பழைய தொப்பி மறுபடியும் வந்தது .
எல்லோரும் சிரிக்கிறார்கள்.
அன்றிரவே இந்த தொப்பியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி குடிநீர் தொட்டியில் போட்டு விட்டான் .
ஒரு நாள் திடீரென்று குழாய் அடைபட்டு போனது.
மாநகராட்சி அலுவலர்கள் வந்து என்னவென்று பார்த்தால் அந்தப் பழைய தொப்பி குழாயை அடைத்துக்கொண்டிருந்தது .
இது குப்புசாமியின் தொப்பி என்பது எல்லோருக்கும் தெரியும்.
குப்புசாமி 2,500 ரூபாய் அபராதம் கட்டி விட்டு வெளியில் வந்தான். கடைசியாக முடிவு பண்ணினான்.
நெருப்பு வைத்தான் தொப்பி எரிந்தது.
எடுத்து வெளியில் எறிந்தான்.
கொஞ்ச நேரத்தில் தீயணைப்பு படை வந்து விட்டது.
இவன் எடுத்து எறிந்தது வழியில் உள்ள கூரையின் மேல் விழுந்து பற்றிக்கொண்டது.
அவனுடைய பணத்தாசையும் அதோடு சேர்ந்து அழிந்து போனது என்று கதையை சொல்லி முடித்தார் அந்த இமயமலை அடிவாரத்தில் இருந்த சந்நியாசி.
இப்போது அந்த குப்புசாமி எங்கே இருக்கான் என்று கேட்டார் எதிரில் இருந்தவர் .
இதோ உன்ன எதிரிலேயே இருக்கிறார்.
நான்தான் அந்த குப்புசாமி என்றார் சந்நியாசி.
குப்புசாமியிடம் இருந்தது போல் ஒரு பழைய தொப்பி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது அதை எப்படி வைப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற மாயைதான் அந்தத் தொப்பி என்கிறார் சுவாமி சின்மயானந்தர்.
ஞானம் எப்போது கிடைக்கிறதோ அப்போது மாயையும் எரிந்து போகும் என்கிறார் அவர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·