Category:
Created:
Updated:
S
புதிதாக வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரியிடம் முதலாளி சொன்னார். "டெலிபோன் மணி அடித்த உடன் டெலிபோனை எடுத்து ஹலோ என்று பேசக் கூடாது. 'இது சுந்தரம் வீடு. நான் அவர் வேலைக்காரி பேசுகிறேன். உங்களுக்கு யார் வேண்டும்' என்று கேட்க வேண்டும். நாம் எங்கு இருக்கிறோமோ அந்த இடத்தைக் குறிப்பிட்டுப் பேசுவதுதான் முறை. என்ன நான் சொல்வது புரிகிறதா? அப்படியே நடந்து கொள்வாயா?"
அப்படியே நடந்து கொள்கிறேன்" என்றாள் வேலைக்காரி.
ஒரு நாள் அவள், படுக்கை அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அங்கே டெலிபோன் மணி அடித்தது. போன் செய்தது வெளியூரில் இருக்கும் சுந்தரத்தின் மனைவி.
டெலிபோனை எடுத்த வேலைகாரி, "சுந்தரம் படுக்கை அறையிலிருந்து வேலைக்காரி பேசகிறேன். உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டாள்.
சோலி முடிஞ்சது....