Support Ads
Main Menu
 ·   · 178 posts
  •  · 2 friends
  •  · 2 followers

காட்சி தந்த கடவுள்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....


பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.....!!


கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..


எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ...... அதேபோல.. 


ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்...  நாட்டின் மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.


இது  அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும்  இருந்தாலும்,


மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.....!!


அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..


காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார்.....!


மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு


அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான்....!


அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....!


சிறிது உயரம் சென்றவுடன்.. 


அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....!


உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.


மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது.....!!


இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்.


அதற்கு மன்னா  இப்பொழுது இதுதான் தேவை


கடவுளின்  காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.


எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்..


மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன...


அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று வெள்ளி துண்டுகளை மூட்டை கட்ட ஆரம்பித்தனர்...


மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான் விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது


அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.


மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட, வெள்ளிக் கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே  மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். 


உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. 


மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். 


இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை..... ராஜகுடும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்றுவிட  *மீதி இருந்தவர்கள்  ராணியும்..மந்திரியும்,

தளபதியும்,  மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே


சரி வாருங்கள், செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன் அங்கே தென்பட்டது வைரமலை....!!


அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்


கடவுள் மன்னன் முன் தோன்றி * "எங்கே உன் மக்கள்" என்றார்.


மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே,  என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்


அதற்கு கடவுள் , "தயாராக இருப்பவர்களுக்கே கிடைக்ககூடியது இந்த பாக்கியம்


நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவும் உங்களைதான் தேடிக்கொண்டு இருக்கின்றது.


உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு, உடல்..செல்வம்.. சொத்து... என்ற, செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்.. போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.


இவற்றையெல்லாம் கடந்து பாசம்,நேசம், கருணை இருப்பவரே.. எம்மை அடைவர் என்று சொல்லி விண்ணில் மறைந்தார் கடவுள்....!!

0 0 0 0 0 0
  • 244
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
காளிதாசர்
 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்
கபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்
கொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.தற்போது க
Ads
Latest Posts
சிறப்பு வாய்ந்த ஆனித்திருமஞ்சனம்
ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சசபைகள
வீடுகளில் தீபம் ஏற்ற உகந்த நேரங்கள்
இறைவன் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இ
படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டு
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
மன்மதன்சிலை..! எங்குள்ளது தெரியுமா?
இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே
சாஸ்திரம் ...... தெரிந்துக் கொள்வோமா?
1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒ
Ads