Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்ததில் நெஞ்சைத் தொட்டது

சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...

எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.

அது ஒரு வாரக் கடைசி என்பதால், போகாமல் தட்டிக் கழிக்கவே முதலில் தோன்றியது! காரணம், நிச்சயம் அது உப்புச்சப்பில்லாமல், போர் அடிக்கும் என்ற எண்ணம் தான்.! அந்த வாரக் கடைசியை வேறு மாதிரி, ரிலாக்ஸ் செய்யலாமே, என்று தோன்றியது.

ஆனால், சிங்கப்பூரில் தனியாக வாழ்வதில், சிக்கலும் உண்டு.! நேரத்தை செலவு செய்ய என்ன செய்வது, என்று புரியாமல் போகும்! அந்தக் காரணத்தாலும், எல்லாவற்றுக்கும் செலவாகும் ஊரில்,.. அந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதாலும், அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.! 

பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட! தன்னிச்சையான ஒட்டுதலுடன், சிங்கப்பூரில் வாழ்க்கை பற்றி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன்!

நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்தப் பார்வை அற்றவர்களுக்கு, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும்,  திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!

அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.

அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"

இந்தப் பதிவு,... இதைப் பற்றியது தான்.

நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக் கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப் போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப் போவது,...

மூன்று, பார்வையற்றவர்கள் குழு!

ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!

அந்தத் தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).    

1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்: 

நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,... 

(கடிகாரத்தின் சிறிய முள்) 

-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!

-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!

-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!

-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!

-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!

2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும்.  அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!

3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும் பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது  ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும் வரை விட்டுக் கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான் வழி!)

டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"

எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லி விட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தோம்!

அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில், 

எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!

நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (ஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்! 

அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள் தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்தப் பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!

இந்தப் பார்வையற்ற மூவர் குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச் சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த  சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!

எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது தான்! 

அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பி விட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டு விட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்து கொண்டவுடன்,...

அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!

நாற்பதில், ஒருவர் தவறாமல்,கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!

வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!

இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...

என்பதை உணர்ந்தோம்!

அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!

எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!

உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல், 

இல்லாதவைகளுக்கு குறை சொல்லும் 

நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!

புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில், 

எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!

சந்தோஷமாக வாழுங்கள்! 

சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!

நன்றியுடன் இருங்கள்! 

இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,

நிறைய விஷயங்கள் உள்ளது!

எனக்கு, கண்திறப்பு நிகழ, சிங்கப்பூரில் ஒரு கும்மிருட்டில், இரவு உணவு தேவைப்பட்டது! 

உங்களுக்கு,

இந்தப் பதிவே கூட

போதுமானதாக இருந்தால்...

என் அனுபவம், அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கும்!

  • 461
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்