- · 5 friends
-
I
குப்பம்மா கிழவி (குட்டிக்கதை)
"குப்பம்மா கிழவி என்றாலே எங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும்.
"குப்பம்மா எங்கள் வீட்டில் மாடு கன்னு போட முடியாமல் துடிக்குது "வந்து ஒரு எட்டு பாரு "
இரண்டு நாளா புருஷன் வீட்டிலே இருந்து கிட்டு ஒரே தொல்லை இடுப்பெல்லாம் நோகுது என்ன பன்னுதுன்னு தெரியல ஒரு வைத்தியம் சொல்லு "
ஏய் கிழவி அந்த ஒன்டு வீட்டு கிழவனுக்கு ரொம்ப நாளா இழுத்து கிட்டு கிழம் சட்டுன்னு புட்டுக்க மாட்டிக்குது ஒரு தடவை கையே நாடி புடிச்சு எப்ப நிக்குன்னு சொல்லு "
இப்படியாக அந்த ஊர் மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் குப்பம்மா கிழவிக்கு நிறைய கைவசம் வைத்தியம் வைத்து இருக்கிறது.
அதுக்கு எந்த காசும் கையாலே வாங்காது.ஒரு வேளை சோறு ஒரு கப் வர தண்ணி இது தான் அந்த கிழவிக்கு.
ஊரின் ஒதுக்கு புறத்தில் சிறு கம்பை கொண்டு பனை ஓலையால் கூரை வேய்ந்து அதில் அந்த கிழவி வாழ்ந்து வந்தது.
அந்த கிழவி அந்த ஊர் இல்லையாம்.ஆனால் நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்து அந்த கிழவி எங்க ஊரில் வாழ்ந்து வந்தது.அதுக்குன்னு யாரும் கிடையாது.எங்க பாட்டி கிட்ட அந்த பாட்டி எந்த ஊருண்ணு கேட்டபோது எதாச்சையா அந்த ஊர் வழியாக போய்கிட்டு இருந்ததுதாம் அந்த ஊரில் யாரோ ஒருத்தனுக்கு பாம்பு கடித்து வாயில் மொரை தள்ளி தூக்கி கிட்டு அழுதுட்டு தூக்கி கிட்டு போனபோது அந்த கிழவி ஏதோ ஒரு மூலிகையை தேடி கண்டுபிடிச்சு வேரை பிழிந்து ஊற்றி வைத்தியம் பார்க்க அவரை பிழைக்க வைச்சிருச்சு.
அன்றையிலிருந்து குப்பம்மா கிழவியை எங்கள் ஊருக்கே பிடிச்சு போச்சு.அன்றையிலிருந்து எங்கள் ஊரில் தங்கிடுச்சு.தங்கி கிட்டு சின்ன சின்ன கை வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சுது.
ஆனால் அந்த கிழவி எந்த ஊரு ? ,
தான் யாரு ? இது போன்ற எந்த விவரத்தையும் சொன்னது கிடையாது.அந்த கிழவியை தேடியும் யாரும் வந்தது கிடையாது.ஆனால் அந்த கிழவியை பற்றி எது கேட்டாலும் பதில் சொல்லமலே சிரிச்சு மழுப்பிடுமாம்.சில வருடங்களுக்கு பிறகு அந்த கிழவியை பற்றி யாரும் எதுவும் கேட்பது கிடையாது.நாளடைவில் அந்த ஊரின் தவிர்க்க முடியாத பிரஜையாக மாறி விட்டது.யார் வீட்டில் எது நடந்தாலும் அந்த கிழவி இல்லாமல் நடக்காது என்ற அளவுக்கு நெருங்கிய உறவாகி விட்டது.
அந்த ஊரின் என்னை போன்ற இளம் சிறார்களுக்கு குப்பம்மா பெற்றேடுக்காத குழந்தையாகி விட்டோம்.அந்த ஊரின் அந்த கால கட்டத்தில் சின்ன குழந்தையாக இருந்த எங்களுக்கு
குப்பம்மா கிழவியை மறந்து இருக்க மாட்டார்கள்.அவர்கள் மனதின் ஓரத்தில் அந்த கிழவி பற்றிய ஞாபகம் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த சிறு வயது குழந்தைகளுக்கு உடல் நிலை முடியாமல் இருக்கும் போது கஷாயம் வைத்து கொடுப்பது ,நெற்றியில் பற்று போடுவது ,சுலுக்கு வலிப்பது ,பயந்துட்டா பேய் விரட்டி திருநீறு பூசி விடுவது இப்படியாக குப்பம்மா கிழவி தொடாத குழந்தை கிடையாது.அதனாலே என் வயது ஒத்த குழந்தைகளுக்கு காசு வாங்காத குட்டி வைத்தியராக அந்த குப்பம்மா கிழவி திகழ்ந்தார்.
எனது பள்ளி பருவ காலங்களில் எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ரேஷன் கார்டில் பெயர் இல்லாத குடும்ப அங்கத்தினராக வாழ்ந்து வந்த அந்த குப்பம்மா கிழவியை ஒரு நாள் காணவில்லை.ஊரே அவளை அந்த ஊரின் எல்லா இடங்களிலும் தேடி பார்த்து விட்டு அவ எங்கே போயிருக்கா திரும்பி வந்துடுவா என ஆறுதல் சொல்லி கொண்டது.இருந்தாலும் எங்கள் ஊரின் எல்லா மனதிலும் ஏதோ இனம் புரியாத துக்கம் அடைத்து கொண்டது.
எல்லாவற்றிற்கும் அந்த கிழவியின் உதவியை பெற்ற எங்கள் ஊர் மக்கள் அந்த கிழவியை பற்றியையும் அவ செய்த உதவியை பற்றியும் பல இடங்களில் பேசி கொண்டது.கடைசி வரைக்கும் அந்த கிழவி யாருன்னு அடிப்படை விஷயமும் தெரியலே .இப்ப எங்க போச்சுன்னு ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
நாளடைவில் ஆண்டுகள் பல கடக்க அந்த கிழவியை பற்றி யாரும் எதுவும் பேசலே.மெல்ல மெல்ல குப்பம்மா என்ற அந்த கிழவி மறந்து போய் விட்டது.
இப்படியாக சில மனிதர்கள் நம் வாழ்வில் வந்து போவதுண்டு.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·