-
- 3 friends
இன்றைய ராசி பலன் – டிசம்பர் மாதம் 7, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 22ஆம் தேதி
மேஷம் -ராசி:
சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியான வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம் ராசி:
சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமித்தமான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம் -ராசி:
உடன் பிறந்தவர்களிடம் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பயணங்களால் சோர்வு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கடகம் -ராசி:
குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். நிர்வாகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். செய்கின்ற முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் அவசியம். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம் -ராசி:
சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி -ராசி:
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம் -ராசி:
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்- ராசி:
ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றம் காணப்படும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும் வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு -ராசி:
உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மகரம் -ராசி:
தேவைக்கேற்ப தன வரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். கோப உணர்வுகளை குறைத்து கொள்ளவும். செல்லப்பிராணிகள் மீதான ஆர்வங்கள் அதிகரிக்கும். தெளிவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
கும்பம் –ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம் -ராசி:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோக மாற்றப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·