- · 5 friends
-
I
எல்லாம் இறைவன் செயல் (குட்டிக்கதை)
ஒரு துறவி மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் காட்டின் வழியாக இறங்கி கிராமத்திற்கு சென்று வரலாம் என்று யோசித்தார் . போகும் வழியில் சிறிது நேரம் மரத்தடியில் படுத்துக்கொண்டு அரைக்கண் மூடியபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார், அவ் வேளையில் ஒரு கிராமத்து இளைஞன் மலையில் தேன் எடுப்பதற்காக தனியே வந்துகொண்டிருந்தான் வழியெல்லாம் அவனுக்கு அவனின் வறுமை மற்றும் ஏமாற்றம், சண்டை என இவை நினைத்தபடி புலம்பிக்கொண்டே சென்றான்.சிறிது நேரம் மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது அவன் எதிரில் உள்ள மரத்தடியில் படுத்துக்கொண்டிருந்த துறவியை பார்த்து உன்னை போல் நான் இருந்தால் நானும் இப்படி நிம்மதியாக தூங்கி இருந்திருப்பேன் ஹீம் என்ன செய்வது ?எல்லாம் என் தலைவிதி!!அந்த ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறாரோ ? என்று புலம்பினான் அந்த புலம்பல் துறவியின் காதுகளில் கேட்டது.
அவர்,உனக்கு என்னப்பா பிரச்சனை ? என்று கேட்டவுடன் அவன் ஓடி வந்து தனக்குள் இருக்கும் வேதனைகள் மற்றும் குடும்பப்பிரச்சனை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டான்.இதை பொறுமையாக கேட்ட துறவி ,உனக்கு ஒரு கதை சொல்கிறேன். அந்த கதை போலவே நீ நடந்துகொண்டால் உனக்கு எந்த பிரச்சனையும் பெரிசா தெரியாது என்று கூறத்தொடங்கிறனார்.
ஒரு வயதான ஏழை விவசாயி , அவரது கடின உழைப்பிற்கு வரும் சிறிய வருமானத்தில் இருப்பதை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.ஒருநாள் திடீரென்று அவர் வளர்த்து வந்த 2 பசுக்கள் காணாமல் போய்விட்டது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதை கண்ட அக்கம் பக்கத்தினர் ” என்ன ஒரு துரதிர்ஷ்ட நிலை உனக்கு” ? ஐயோ பாவம் ! என்று கூறினர். அதற்கு அந்த விவசாயி கஷ்டப்படாமல் அமைதியாக, இருக்கட்டும்…நன்றி ! எல்லாம் இறைவன் செயல் ! என்று நிதானமாக கூறினார்,
மறுநாள் அதே 2 பசுக்கள் மேலும் 2 பசுக்களுடன் கூட்டிக்கொண்டு அவரை தேடி வந்துவிட்டன, இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர்”பரவாயில்லையே இப்பொழுது உனக்கு 4 பசுக்களா !! உனக்கு நல்ல அதிர்ஷ்ட யோகம் தான் போ” ! என்றனர், அதற்கும் அவர் ஆஹா அதிர்ஷ்டம் கிடைத்ததே என்று சந்தோசப்படாமல் எல்லாம் இறைவன் செயல் என்று கூறினார். இது மாதிரி அவர் வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி எல்லாம் இறைவன் செயல் என்றே கூறினார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·