-
- 2 friends
குரு கொடுத்த அடி (குட்டிக்கதை)
ஒரு சீடன் வெளியூர் புறப்படுவதற்கு தயாராக இருந்தான்.
மிகவும் நீண்ட தூரம் போகப் போகிறான்.
திரும்பி வர நாளாகும். புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளில் அவன் ஈடுபட்டிருந்தான்.
அந்த சமயம் பார்த்து இன்னொரு சீடன் அவனிடம் வந்தான்.
நம்முடைய குரு உன்னை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.
வா என்று கூப்பிட்டான்.
இவன் உடனே புறப்பட்டு போனான்.
குருநாதரை பார்த்தான்.
அவருடைய காலில் விழுந்து வணங்கினான்.
அவ்வளவுதான் வணங்கி விட்டு எழுந்தான்.
குரு ஏதாவது உபதேசம் செய்வார் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் என்ன நடந்தது தெரியுமா?
குரு அவனுக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.
எதிர்பாராமல் இந்த அடியை வாங்கினதும் அந்த சீடன் அதிர்ந்து போய் விட்டான்.
பக்கத்தில் இருந்த மற்ற சீடர்களும் திகைத்துப் போய்விட்டார்கள்.
அடிவாங்கிய சீடனுக்கு மனசுக்குள்ளே குழப்பம்.
நாம் என்ன தப்பு செய்தோம். புறப்படுகின்ற நேரத்தில் இப்படி குருவிடம் அடி வாங்கி விட்டோமே! என்று மனதுக்குள்ளே மிகவும் வேதனைப்பட்டான். .
கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு குருநாதரிடம் கேட்டான்.
சுவாமி நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் என்னை இப்படி அடித்தீர்கள்? ஒரு வார்த்தை கூட உங்களை எதிர்த்து நான் பேசியதில்லையே.
இவ்வளவு காலமாக உங்கள் விருப்பத்துக்கு விரோதமாக ஒரு காரியம் கூட நான் செய்வதில்லை. வந்ததும் வராதுமாக ஒன்றுமே சொல்லாமல் என்னை அடித்து விட்டீர்களே.
குருவே! நான் செய்த குற்றம்தான் என்ன? என்று கண்ணீரோடு பரிதாபமாக கேட்டான்.
ஆனால் அந்த குரு முகத்தில் கொஞ்சம் கூட கோபம் இல்லை.
அவர் சிரித்தபடியே " என் அருமைச் சீடனே நீ ஒரு தவறும் செய்யவில்லை.
நான் உன்னை அடித்தது நீ ஏதோ தப்பு செய்துவிட்டாய் என்பதற்காக அல்ல.
நீண்ட பயணம் செல்ல போகிறாய். ஞாபகமாக ஏதாவது கொடுக்க வேண்டுமே!
நீ ஞானம் பெற்ற பிறகு தான் திரும்பி வரப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும்.
அதன் பிறகு உன்னை அடிக்க முடியுமா? அதனாலேதான் இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். இப்போதைக்கு அடித்து விட்டேன். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை" என்றார்.
இதுவும் ஒரு வகை உபதேசம்தான்.
அதாவது அதிர்ச்சிகளாலே விழிப்படைய வைப்பதும் ஒரு வழிதான்.
அதாவது ஜென் வழி.
பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமாகவே ஞான தரிசனத்தை அருள்கிறவர்கள் ஜென் குருமார்கள்.
தியானம்தான் ஜென் எனப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இது சீனாவுக்கு போய் கொஞ்சம் பேர் மாறி வளம் பெற்று ஜப்பானில் ஜென் ஆகி வளர்ந்திருக்கின்றது.
ஜென் என்பது தியானம்!
எதை நினைத்தும் தியானிப்பதல்ல.
எல்லாவற்றிலும் தியானம் இருப்பதாக ஜென் சொல்லுகிறது.
பேசுவது, இருப்பது, நடப்பது, சாப்பிடுவது, சிரிப்பது, தூங்குவது, தொழில் செய்வது அல்லது சும்மாவே இருப்பது அனைத்துமே தியானம்தான் என்கிறது ஜென்.
ஜென்மார்க்கத்தை பற்றி ஓசோ கூறுகையில் "காணாமல் போன தன் மூக்கு கண்ணாடி தன் மூக்கின் மேல் இருப்பதை கண்டு கொள்வது போன்றது ஜென்" என்கின்றார்.
இல்லாத எதையும் தேடி கண்டுபிடிப்பது அல்ல.
ஜென் என்பது ஒரு சுய தரிசனம். அது தன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்வதாகும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·