·   ·  1599 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கடவுள் இருக்கிறாரா? (குட்டிக்கதை)

ஒருவர் திருச்செந்தூர் முருகனின் பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது.

அந்த கடையின் ஒரு மூலையில், திருச்செந்தூர் முருகன் படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு திருச்செந்தூர் முருகனின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார்.

அவருக்கு ஒரு மகன், அவன், தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண விரும்பாமல், பக்தர் அமைதி காத்தார்.

_காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது. தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

ஆகவே, ஒரு நாள் அவர் அவருடைய மகனிடம், “மகனே! நீ கடவுளை நம்புகிறாயோ இல்லையோ, எனக்கு ஒன்று போதுமானது. நீ கடின உழைப்பாளி, இரக்கமானவன், நேர்மையானவன். உன்னிடம் ஒன்று மட்டும் கேட்டு கொள்கிறேன் செய்வாயா?” என்றார்.

உறுதியாகச் செய்வேன் அப்பா.” என்று கூறினான். “மகனே, என் மரணத்திற்குப் பின், கடையில் இருக்கும் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் படத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஏதாவது கஷ்டத்தில் நீ எப்போதாவது சிக்கிக் கொண்டால், உன் கையை குவித்து உன்னுடைய பிரச்சனையை ஸ்ரீதிருச்செந்தூர் முருகனிடம் கூறு. நான் கூறியது போல் இதை மட்டும் செய்து விடு.” என்றார்.

மகனும் சம்மதித்தான். சில நாட்களுக்குப் பிறகு அப்பா இறந்து போய் விட்டார். காலமும் கடந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்தது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. மின்சாரம் வேறு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.*_

_திடீரென்று முழுவதும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே ஒரு பையன் ஓடி வந்தான். “அண்ணா, எனக்கு இந்த மருந்து தேவைப் படுகிறது. என் அம்மா மிகவும் சுகவீனமாக இருக்கிறாள். இந்த மருந்தில் நான்கு ஸ்பூன்கள் உடனடியாக கொடுத்தாக வேண்டும். அதன் பிறகுதான் உன் அம்மாவைக் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் கூறி விட்டார். இந்த மருந்து உங்களிடம் இருக்கிறதா?” என்றான்.

மருந்து சீட்டைப் பார்த்து விட்டு, "என்னிடம் உள்ளது" என்று கூறி மருந்து பாட்டிலை கொடுத்து அனுப்பினான் மகன்.

அந்தப் பையன் கிளம்பிய உடனே, கவுண்டரைப் பார்த்தான், வியர்த்து, விறுவிறுத்துப் போனான்!_ 

ஒரு வாடிக்கையாளர் சிறிது நேரத்துக்கு முன்புதான் ஒரு பாட்டில் எலி விஷத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். கரண்ட் இல்லாததால், லைட் வந்த பிறகு, அதனை சரியான இடத்தில் வைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டே அதை கவுண்டரில் வைத்து விட்டான்.

ஆனால் இந்த மருந்து பாட்டிலுக்குப் பதிலாக எலி விஷம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்று விட்டான் அந்த பையன். அவனுக்கு படிக்கவும் கூட தெரியாது. கடவுளே! இந்த சொற்கள் தானாகவே மகனின் வாயிலிருந்து வெளியே வந்தன. இது என்ன பேரழிவு!

அவருக்கு அவர் அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே கைகளை குவித்து, திருச்செந்தூர் முருகன் படத்தின் முன்னே சென்று, கனத்த இதயத்தோடு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்:  

பிரபுவே! அப்பா எப்போதும் வழக்கமாக கூறுவார், நீங்கள் இருக்கிறீர்கள் என்று. நீங்கள் இருப்பது உண்மை என்றால், தயவு செய்து இன்று நடக்கும் கெட்ட நிகழ்வை, தன் மகனின் கைகளில் விஷத்தைப் பெற்று ஒரு அம்மா இறப்பதை நடக்க விடாமல் செய்து விடுங்கள்” என்று இறைஞ்சினான்._

*அண்ணா” அந்த நேரத்தில் ஒரு குரல் பின்னால் இருந்து கேட்டது.“அண்ணா, சேற்றில் நான் வழுக்கி விழுந்து விட்டேன். மருந்து பாட்டிலும் உடைந்து விட்டது! தயவு செய்து வேறு ஒரு பாட்டில் தாருங்கள்.”என்றான் பையன்.

அழகிய புன்னகையுடன் தோற்றமளிக்கும் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, மகனின் முகத்தில் கண்ணீர் பாய்ந்தோட தொடங்கியது. ஒரு நம்பிக்கை அவருள் விழித்தெழுந்தது

அதாவது மேலே யாரோ ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்.

சிலர் அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை ஈடு இணையற்றவர் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரை எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தி என்றும் கூறுகிறார்கள். சிலர் பேராற்றல், பேரறிவு, என்றும் கூறுகிறார்கள்._

இறைவன் மீது அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்தோடு செய்யப்படும் பிரார்த்தனையானது ஒரு போதும் வீணாகாது என தன் அனுபவத்தில் உணர்ந்தான் மகன்.

----மஹா பெரியவா சொன்ன கதை

ஓம் சரவண பவ!

மஹா பெரியவா சரணம்

ஜெய ஜெய சங்கர!

ஹர ஹர சங்கர!!

  • 930
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய