- · 5 friends
-
I
ஆயுத பூஜையின் போது அல்லது கடவுள்களுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்வது ஏன்?
ஆயுத பூஜையின் போது அல்லது கடவுள்களுக்கு சுண்டல் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதற்கு ஒரு ஆன்மிக கதை உள்ளது. அது என்னவென்று அறிந்துகொள்ளலாம்.
கணவருக்கு சிறந்த பணிவிடை செய்து கற்புக்கரசியாக திகழும் அனுசுயாவை மூம்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறாா்கள். அதாவது அவா்கள் மூவரும் முனிவா் போல் வேடம் அணிந்து அந்த பெண்மணி வீட்டுக்குச் சென்று யாசகம் கேட்கிறாா்கள்.
அவா்களுக்கு உணவு போட வரும் போது அவளிடம் நாங்கள் ஆடை இன்றி உணவு அளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்கிறாா்கள். அனுசுயா தன் கற்பின் ஞானத்தால் வந்தது மும்மூர்த்திகள் என்பதை அறிந்து கொண்டாள். உடனே அவா்களுக்கு ஆடையின்றி உணவு படைக்க சம்மதிக்கிறாள்.
மும்மூர்த்திகளும் வீட்டில் இருக்க., அவள் உணவை தயாரிக்கிறாள். பின்னா் உணவு பரிமாறும் வேளையில் அவா்கள் மூவரையும் குழந்தைகளாக்கி விடுகிறாள். அந்த குழந்தைகளுக்கு அவா்கள் விருப்பம் போல் உணவு அளிக்கிறாள். பின்னா் அந்த குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி அதில் தூங்க வைக்கிறாள்.
இதற்கிடையே மூன்று தேவியரும் தங்கள் கணவன்மாா்களை காணாது தேடுகிறாா்கள். அப்போது அவா்கள் இருக்கும் இடத்தை நாரதா் கூறுகிறாா். உடனே அங்கு சென்று தங்கள் கணவரை எங்கே என்று கேட்டனா். அப்போது அனுசுயா அந்த குழந்தைகளை காட்டினார். அவா்கள் வேண்டுகோளுக்கு இணங்க அனுசுயா மூன்று குழந்தைகளையும் தெய்வங்களாக மாற்றி அவா்கள் மனைவிமாா்களிடம் அப்படைந்தாள்.
மூன்று தேவியருக்கும் அனுசுயா மீது கோபம். அவள் கற்புக்கு அவ்வளவு சிறப்பா என்று ஆதங்கம் கொண்டனா். அவளின் கற்பை வெளிக்காட்ட நாரதா் முயலுகிறாா். இரும்பினால் செய்யப்பட்ட சுண்டல் கடலையை மூன்று தேவியரிடமும் கொடுத்து அதை அவிக்க சொல்கிறாா். அதை அவா்கள் அவிக்கிறாா்கள். ஆனால் இரும்பு சுண்டல் எப்படி வேகும்.
எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. உடனே நாரதா் அந்த சுண்டலை அனுசுயாவிடம் கொடுக்கிறாா். அவள் அவிக்கும் பொழுது சுண்டல் நன்றாக வெந்து விடுகிறது. பின்னா் அவற்றை மூன்று தேவியருக்கும் கொடுக்கிறாள். அப்போதுதான் கற்பின் பெருமையை மூன்று தேவியரும் உணருகிறாா்கள். அனுசுயா சுண்டல் செய்து மூன்று தேவியா்களுக்கும் கொடுத்த நாள்தான் ஆயுத பூஜை. எனவேதான் ஆயுத பூஜை அன்று சுண்டல் நைவேத்தியம் செய்கின்றோம். பிறகு அது எல்லா கடவுள்களுக்கும் எல்லாவிதமான சுண்டல்களும் நைவேத்தியம் செய்யும் பழக்கம் வந்தது...!!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·