- · 5 friends
-
I
ஐயோ! பேய் ஓடுங்க! ஓடுங்க (குட்டிக்கதை)
நகரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவன் திடீர் காரணத்திற்காக அவனுடைய கிராமத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. வேலை முடித்து விட்டு வந்தவன், ஊருக்கு போக பஸ் ஸ்டான்ட் போனால் கடைசி பஸ் போய் விட்டது!
என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ரோட்டில் ஒரு வண்டி நின்று கொண்டு இருந்தது. அந்த டிரைவரிடம் போய் ஐயா அந்த கிராமம் வழியாக தானே போகிறீர்கள்! ரொம்ப அவசரம் நானும் வருகிறேன்! பிளீஸ் என்று கெஞ்ச!
அதற்கு அவன் முன்னாடி இடம் இல்லை பின்னாடி இடம் இருக்கு போய் உட்கார்ந்து கொள்! என்று சொன்னான்!
பின்னாடி போனவனுக்கு ஒரே அதிர்ச்சி அங்கே ஒரு சவப்பெட்டி இருக்க! இவன் டிரைவர் கிட்ட வந்து என்னங்க பினம் இருக்கு பின்னாடி என்று சொல்ல!
அதற்கு டிரைவர் வெறும் சவப்பெட்டி தான் பயப்படாமல் ஏறுங்க என்று சொன்னான்! அவனும் சரி என்று ஏறிக் கொண்டான்
கொஞ்ச தூரம் சென்ற பின் மழை வர ஆரம்பித்து இருந்தது. மழையில் நனைய கூடாது என்று சவப்பெட்டி கொள் படுத்து கொண்டான்! அப்படியே தூங்கி போனான்!
மழை விட்டு இருந்தது. ரோட்டில் லிஃப்ட் கேட்டு மேலும் இரண்டு பேர் நிற்க! டிரைவர் அவர்களிடம் பின்னாடி ஏறிக் கொள்ளுங்கள், வெறும் சவப்பெட்டி தான் இருக்கு பயப்படாமல் உட்காருங்கள் என்று சொல்ல அவர்கள் ஏறி கொண்டனர்.
தூக்கத்தில் இருந்து விழித்தவன்! மழை நின்று விட்டதா என்று பார்க்க கையை வெளியே நீட்டி பார்த்தான்!
சவப்பெட்டியில் இருந்து திடீர் என்று கை நீட்டி கொண்டு வருவதை பார்த்வர்கள் திகைத்து நின்றனர்.
மழை நின்றுவிட்டது என்று உறுதி செய்தவன் சவப்பெட்டியை திறந்து கொண்டு வேகமாக எழுந்திருக்க!
பேய்! பேய் என்று சத்தம் போட டிரைவர் வண்டியை நிறுத்தினான்! அவ்வளவு தான் வண்டியில் இருந்து இறங்கி இருவரும் ஓட ஆரம்பித்தனர்!
டிரைவருக்கு ஒன்றும் புரியவில்லை! சவப்பெட்டியில் இருந்து எழுந்தவனுக்கும் ஒன்றும் புரியலை!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·