- · 5 friends
-
I
வாழைத்தாறு
வாழைத்தார் என்று எழுதுகின்ற வழக்கம் நம் அனைவர்க்கும் உண்டு. அதனில் ஒரு பிழை இருக்கிறது.
தார் என்பது தவறு. தாறு என்பதுதான் சரி. வாழைத்தாறு என்று எழுத வேண்டும்.
எழுத்து வழக்கைவிடவும் பேச்சு வழக்கு பிழையின்றி இருக்கும் என்பதற்கு ‘வாழைத்தாறு’ நல்ல எடுத்துக்காட்டு.
உரிய அளவில் சிறு பகுதிகளாகப் பிரிபட்டிருக்கும் நிலையில் தொகுபட்டிருப்பதுதான் தாறு.
முழுமையான வாழைத்தாறு தனிப் பழங்களாகப் பிரிபட்டிருப்பதனை இங்கே கருத வேண்டும்.
ஒரு முழுமையை மேலும் கீழும் முன்னும் பின்னும் உரியவாறு பிரித்துப் பகுத்தல் என்பதுதான் தாறு. வாழைத்தாற்றில் இயற்கையே அவ்வாறு பிரித்து வைத்திருக்கிறது.
நாமே அவ்வாறு செய்வதற்குத் “தாறு தாறாய்க் கிழித்தல்” என்று பெயர். அதனைத்தான் பிற்காலத்தில் “டாரு டாராய்க் கிழித்தான்” என்று கூறத் தொடங்கினோம்.
தாறு என்பது முற்றிலும் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது. அதன் பகுப்பும் உருவமும் தொகுப்பும் முழுமையான வடிவத்தில் அமைவது. அவ்வமைப்பில் ஒழுங்கின்மையும் கேடும் தோன்றினால் அதுதான் “தாறுமாறு.” ஒழுங்கின் மாறுபாடு.
“எல்லாம் தாறுமாறாய் நடக்குது, நினைச்சபடி இல்லாமல் தாறுமாறாப் போச்சு” என்று பேச்சுவழக்கில் சொல்கிறோம்.
“உழிஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம்” என்பது அகநானூறு (151).
நினைவிருக்கட்டும்.
வாழைத்தாறு
தாறு தாறாய்க் கிழித்தல் = டாரு டாராய்க் கிழித்தல்
தாறுமாறு
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·