-
- 3 friends
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் மாதம் 1, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 16 ஆம் தேதி
மேஷம் -ராசி:
பெரியோர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். எண்ணிய சில வேலைகள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். தாய்வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம் ராசி:
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் குறையும். மாமனார் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். தேவைகளை அறிந்து பூர்த்தி செய்துகொள்வீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மிதுனம் -ராசி:
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணம் கைகூடும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
கடகம் -ராசி:
சகோதரர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். ஓய்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம் -ராசி:
வியாபார பணிகளில் முதலீடுகள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனையும், கற்பனையும் மேம்படும். அந்நிய தேச பயணங்களில் சாதகமான சூழல் உண்டாகும். மாற்றமான தொழில் சார்ந்த விஷயங்களில் ஈர்ப்பு உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
கன்னி -ராசி:
இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம் -ராசி:
விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்- ராசி:
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிகப் பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான குழப்பம் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு -ராசி:
மனதில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் நிதானம் வேண்டும். மருத்துவ செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் இருக்கவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம் -ராசி:
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். பெருமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம் –ராசி:
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். பணி நிமித்தமான ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வங்கிப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம் -ராசி:
மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·