-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஆகஸ்ட் மாதம் 31, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 15 ஆம் தேதி
மேஷம் -ராசி:
மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் குறையும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம் ராசி:
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சந்தோஷம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம் -ராசி:
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். இழுபறியான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். முக்கியமான பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கடகம் -ராசி:
சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தம்பதிகளுக்குள் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். எதிர்காலம் குறித்த ஒருவிதமான குழப்பம் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம் -ராசி:
ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வியில் சற்று கவனத்துடன் இருக்கவும். நெருக்கமானவர்கள் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி -ராசி:
வியாபாரத்தில் மாற்றமான சுழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம் -ராசி:
கௌரவப் பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்ற முயற்சிகள் கைகூடும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்- ராசி:
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு -ராசி:
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் குழப்பம் ஏற்படும். மறைமுகமான சில தடைகள் மூலம் எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மகரம் -ராசி:
நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். பொன், பொருட்களில் கவனம் செலுத்தவும். புதிய செயல்களில் ஆர்வம் ஏற்படும். கடன் நெருக்கடிகள் குறையும். சுப காரிய எண்ணம் சாதமாக அமையும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம் –ராசி:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய முடிவுகளில் கவனம் வேண்டும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம் -ராசி:
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். முயற்சிக்கு உண்டான ஊதியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·