- · 16 friends
-
S
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்.
கமலஹாசன் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார். இவரை மைக் மோகன் என்றும் அழைப்பார்கள்.
நிறைய வெள்ளி விழா படங்கள். தொட்டதெல்லாம் ஹிட்.
நிறைய அறிமுக இயக்குநர்களின் முதல் படங்கள் இவர்தான் ஹீரோ.
தெற்றுப்பல் முகத்துல அம்மைத் தழும்புகள் என ஆரம்பித்த மோகனின் கலைப் பயணத்துக்கு அந்த தெற்றுப் பல்களே பிளஸ் ஆனது.
மோகன் சிரித்தாலும் ரசித்தார்கள் அழுதாலும் ரசித்தார்கள்
ஒரே வருஷத்தில் 19 படங்கள் நடித்த ஹீரோவும் இவரே
மோகன் நதியா
மோகன் ரேவதி
மோகன் ராதா
மோகன் அம்பிகா
மோகன் ரஞ்சனி
மோகன் பூர்ணிமா
மோகன் ஊர்வசி
மோகன் ஜெயஸ்ரீ
மோகன் அமலா
மோகன் ராதிகா
என மோகன் யாருடன் ஜோடி போட்டாலும் பொருத்தமாக இருந்தது. இவருக்கு மட்டுமே இளையராஜாவின் பல பாடல்கள் ஹிட்டுகளில் இவருடைய படங்களும் அதிகம்.
நூறாவது நாள் படத்தில் மோகன் தான் வில்லன். அப்போ வில்லனாகவும் மோகனை ரசித்தார்கள்.
அந்த காலம் விதி பட வசனங்கள் அப்போது பாட்டு புத்தகமாக வந்து விற்று தீர்ந்தது.
பயணங்கள் முடிவதில்லை 300 நாட்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே 300 நாட்கள், மௌன ராகம் 250 நாட்கள், தொடர்ந்து குங்குமச்சிமிழ், இதயக்கோயில், மெல்லத் திறந்தது, கதவு, பாடு நிலாவே, உதயகீதம், நூறாவது நாள், டிசம்பர் பூக்கள், உயிரே உனக்காக, இளமை காலங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, தென்றலே என்னை தொடு என அதிகமான ஹிட் படங்கள் கொடுத்த நடிகர்.
ஒரே நாளில் மூன்று படங்கள் நான்கு படங்கள் இரவு பகல் இடைவிடாமல் நடித்த ஹீரோவும் இவர் தான். நல்ல நடிகர் ஒரே ஒரு கிசுகிசு இவருடைய வாழ்க்கையைபுரட்டிப்போட்டுவிட்டது.
அத்தனை கதாநாயகிகளுடன் நடித்தவர் என்ன பாதுகாப்பு இல்லாமலா ? இருப்பார்.
மக்கள் அதையும் உண்மை என நம்பியது ஒரு காலம்.
ஷிட் இன்றும் இன்னும் இளமையாகவே இருக்கிறார் மோகன்.
கல்லூரிப் பெண்கள் மோகன் மோகன் என பைத்தியமாக சுற்றியது இவருக்குத்தான் அதிகம்.
அந்த கிசுகிசு மட்டும் வராமல் இருந்தால் இன்றும் மோகன் படங்கள் திரையில் உலா வரும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·