- · 5 friends
-
I
வாழ்க்கை ஒரு இனிய பயணம்
ஒரு பேருந்தில் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தார். ஒரு இடத்தில் ஒரு வயதான பெண்மணி நிறைய பைகளுடன் சத்தம் போட்டு கொண்டு ஏறி அந்த இளம் பெண் பக்கத்தில் அமர்ந்தார்கள்.
அமரும்போது அந்த இளம் பெண்ணை தள்ளிக்கொண்டு மேலும் தான் கொண்டு வந்த பைகளை அவர்களுக்கு நடுவே வைத்து அந்த இளம் பெண்ணுக்கு அசௌகரியம் ஏற்படுத்தினார். ஆனால் அந்த இளம் பெண் அமைதியாக புன்னகைத்துக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது பின்னாடி அமர்ந்து இருந்த மற்றொரு இளம் பெண் அவரிடம் உங்களுக்கு கோபம் வர வில்லையா? என்று மெதுவாகக் கேட்க.
அதற்கு அந்த இளம் பெண் சிரித்து கொண்டே, தேவை இல்லாத ஒரு விடயத்துக்கு சண்டை போடவோ அல்லது விவாதம் செய்யவோ தேவை இல்லை. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவேன் எதற்கு தேவை இல்லாத சண்டை என்றார்.
இந்த பதில் சாதரணமாக ஓர் வார்த்தையாக கடந்து போக முடியாது.
நம் வாழ்க்கை பயணம் மிகவும் சிறியது. இந்த பயணத்தில் தேவை இல்லாத விடயத்துக்கு விவாதம் அல்லது சண்டை செய்யத் தேவை இல்லை.
அது மாதிரியான சண்டைகள் அந்த தருணதிற்கு ஒரு மருந்தாக இருந்தாலும் உண்மையில் நம் கோபம் சண்டை அடுத்தவரின் மனசை காயப்படுத்த கூடும். உலகை திருத்துவது நம் வேலை இல்லை.
ஒன்று ஒதுங்கி செல்ல வேண்டும் இல்லை அவர்களின் செயல்களை மன்னித்து கடந்து செல்ல பார்க்க வேண்டும்.
உங்களை யாரேனும் காயப்படுத்தி விட்டார்கள் என்றால் அமைதியாக கடந்து செல்லுங்கள். காலம் மிகவும் சிறந்தது அது எல்லா காயங்களுக்கும் எல்லா வலிகளுக்கும் ஒரு சிறந்த அரு மருந்து.
இந்த மன்னிக்கும் குணம் உங்களை காயப்படுத்தும் போதும் சரி, உங்களை ஏமாற்றும் போதும் சரி எல்லா நேரங்களிலும் அமைதி காத்து கடந்து செல்வது சிறந்தது.
நம் வாழ்க்கை நேரம் மிகவும் குறைவு, அதை இனிய நினைவுகளால் நிறப்புவோம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·