Support Ads
Main Menu
 ·   · 101 posts
  •  · 12 friends
  •  · 12 followers

கடமை மிக்க காவலர்களுக்கு சமர்ப்பணம்...

அன்று சென்னை புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.பேசி முடித்ததும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை அழைத்து "குமார் நான் கிளம்புறேன் .
பண்டிகை காலம் நைட் ரவுண்ட்ஸ் போங்க.எதாவது பிரச்சினைனா எனக்கு கூப்பிடுங்க"என்றதும் குமார் தலையசைத்தார்.ஸ்டேஷனில் அனைவரும் அவரை வழியனுப்பும் போது ஒரு தம்பதியினர் பரபரப்பாக உள்ளே வந்தனர்.
நேராக திவாகரிடம் வந்து "சார் என் குழந்தைய காணோம் சார்."என்று கதறி அழ தொடங்கினர் .திவாகர் அவர்களை அமர வைத்து பொறுமையாக விசாரிக்க தொடங்கினார்.
அப்போது குழந்தையின் தந்தை"சார் என் குழந்தை பேரு அபர்ணா.இரண்டு வயசு தான் ஆகுது.அவளுக்கு துணி எடுக்க தான் கடைக்கு வந்தோம் .கடை தெரு முழுக்க கூட்டம் .அப்போ ஒரு வயசானவர் மயங்கி விழுந்தார் நானும் என் மனைவியும் அவருக்கு உதவி செஞ்சுட்டு இருந்தோம் .
அபர்ணா பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தா.அவர ஆட்டோல ஏத்தி விட்டுட்டு திரும்புனா அபர்ணாவ காணோம் .கடைத்தெரு பூரா தேடிட்டோம் கிடைக்கல சார்"என்று அவரும் அழத்தொடங்கினார்.
அப்போது குமார் "சார் நீங்க கிளம்புங்க.நாங்க தேடி கண்டு புடிக்கிறோம்.நாங்க பாத்துக்குறோம்"என்றதும் பெற்றவர்கள் திவாகர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர் .அவர்களிடம் வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றவர்.
சிறிது நேரத்திற்கு பிறகு குமாரை அழைத்து "குமார் கிளம்புங்க இந்த கேஸ வேகமா புடிக்கணும்.ஒரு வேளை குழந்தை கடத்தபட்டு இருந்தா நம்ம தாமதம் ஆபத்துல முடிஞ்சிரும்.எனக்கு இது மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன் எனக்கு அனுபவம் இருக்கு. நானும் வர்றேன்"என்று வேகமாய் கிளம்பி கடைத்தெருவில் விசாரணையை துவக்கினார்.
மொத்த காவல் அதிகாரிகளும் திசைக்கு ஒருவராக மிக துரித நிலையில் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் திவாகர் ஒரு தகவலை சேகரித்தார் போன மாதமும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தார்.
இரவு 12 மணியை தாண்டியது குழந்தையின் பெற்றோர் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டு இருந்தனர் . 
அப்போது திவாகருக்கு போன் வர அவர் தனியாக விலகி சென்று பேசி கொண்டு இருந்தார்.பேசிய பின்பு தன் நிலை மறந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார்.
அவரை பார்த்த குழந்தையின் பெற்றோர் மிகவும் பயத்துடன் "சார் என் குழந்தைக்கு என்னாச்சு?"என்று கதறினர்.உடனே திவாகர்"பயபடாதீங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கிடைச்சுரும்"என்று தன்னை வேகப்படுத்தி கொண்டு கிளம்பினார்.
அவரது விசாரணையில் இது கடத்தல் என்பதும் முதியவர் மயங்கியது நாடகம் என்பதும் தெரிய வர காவல் துறை வேகமானது திவாகரன் தலைமையில்.குற்றவாளிகள் சென்னையை தாண்டியிருக்க முடியாது இது பண்டிகை சமயம் அதனால் போலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் .
அதனால் நமது வேகம் இன்னும் அதிகரித்தால் அவர்களை பிடித்துவிடலாம் என்பதால் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அபர்ணாவின் அம்மா கடைத்தெருவில் மயங்கியபடி நடித்த முதியவரை பார்த்து திவாகரிடம் காட்ட முதியவரை காவல் துறையினர் பின் தொடர்ந்தனர்.
சென்னைக்கு அருகில் ஒரு பழைய மண்டபத்திற்குள் இருப்பதை கண்டு பிடித்தனர்.நள்ளிரவு 3 மணிக்கு மேல் திவாகரன் தனது அணியுடன் மண்டபத்தை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தார்.
அவர்களின் பிடியில் அபர்ணா உட்பட எட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர் .அபர்ணாவை அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவர் சென்றதும் அபர்ணாவின் பெற்றோர் குமாரிடம் "இவருக்கு என்ன சார் பிரச்சினை?"என்றதும் குமார் அவர்களிடம் "சாருக்கு உங்க அபர்ணா மாதிரி கயல்ன்னு ஒரு பொண்ணு இருக்கா.சரியான அப்பா செல்லம்.ரோம்ப அழகான குழந்தை .ஆனா அந்த சந்தோசம் ரோம்ப நாள் நீடிக்கல.
கயலுக்கு மூளை புற்றுநோய் அதுவும் கடைசி ஸ்டேஜ்.நீங்க ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னாடி தான் கயலுக்கு உடல்நிலை மோசமா இருக்குனு அவரு மனைவி போன் பண்ணியிருந் தாங்க.
அவரு தன் குழந்தைய பத்தி நினைக்காம உங்க குழந்தைய கண்டு புடிக்க வந்தாரு."பேசி முடிப்பதற்குள் குமாரின் கண்கள்கலங்கின.
திவாகர் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கயலின் உடல் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது .மகளின் உடல் அருகே சிலையாய் நின்றார் .
அப்போது திவாகரின் மனைவி காவ்யா திவாகரை கட்டி அணைத்து"ஏங்க வரல?அவ கடைசி மூச்சு வரை அப்பா அப்பா தான்ங்க சொன்னா.நம்ம செல்லத்த கடைசி நிமிஷம் வரை தவிக்க விட்டுட்டீங்களே?"என்று அழுது அவரின் காக்கி சட்டையை தனது கண்ணீரால் ஈரம் ஆக்கினார்.
திவாகர் தனது மனைவியின் முகம் உயர்த்தி"என் கயல வழியனுப்பி வைக்குறத விட ஒரு குழந்தைய உயிரோட மீட்டு கொடுக்க போயிட்டேன்.என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல அப்பாவான்னு தெரியலம்மா ஆனா நான் ஒரு நல்ல போலிஸ் .என் பொண்ணும் அத தான் விரும்புவா எனக்கு தெரியும்.
இந்த காக்கிக்கு இன்னோரு பெருமை இருக்குடா அது தியாகம் "என்றதும் காவ்யா தன் கணவனின் காக்கி உடையை மெதுவாக தடவி பார்த்தாள்.
இந்த உடைக்கு பின்னால் உடைந்துபோன இதயம் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும் . ( நம் பார்வையில் நமக்கு காட்டும் காவல் துறைக்கு இன்னோர் முகம் உண்டு அதில் தியாகத்தின் ஈரம் அதிகம்)
மீள் பதிவு


0 0 0 0 0 0
  • 115
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
காளிதாசர்
 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்
கபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்
கொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.தற்போது க
Ads
Latest Posts
சிறப்பு வாய்ந்த ஆனித்திருமஞ்சனம்
ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சசபைகள
வீடுகளில் தீபம் ஏற்ற உகந்த நேரங்கள்
இறைவன் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இ
படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டு
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
மன்மதன்சிலை..! எங்குள்ளது தெரியுமா?
இந்த மன்மதன் சிலையில் 6 அடியில் வில் உள்ளது. அந்த வில்லின் மேல் பகுதியில் உள்ள சிறு துளையின் வழியாக கடுகை போட்டால், அந்த கடுகு வில்லில் புகுந்து கீழே
சாஸ்திரம் ...... தெரிந்துக் கொள்வோமா?
1.இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒ
Ads