Support Ads
Main Menu
 ·   · 138 posts
  •  · 2 friends
  •  · 2 followers

இடைக்காடர் சித்தர் பற்றி தெரிந்துக் கொள்வோமா?

வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்


இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர். "என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,'' என அவரை ஏளனம் செய்தனர்.""ஐயோ! மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'' என்று நொந்து கொண்டார் இடைக்காடர். அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார். இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார். அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், "கிரகங்களே! நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும்,'' என வேண்டினார்.கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது. சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும், பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்.


இடைக்காடர் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது,

0 0 0 0 0 0
  • 303
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
இராவணனிடம் உபதேசம் பெற்ற இராமன்
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட இராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவ
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மருத்துவர்கள்  கூறும் அறிவுரை!
உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.ஆரோக்கியமான உணவ
சிவபார்வதியின் முன் காலை நீட்டிய அவ்வை.!!
  •  · 
  •  · beesiva
ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித
குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான வ
மாற்றங்கள் எப்படி ஏற்படும்?
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!நீங்களும் எங்களோடு வந்தால் நன்றா
கோவில் வாசற்படியை மிதித்து உள்ளே செல்வது சரியா?
கோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா?
Ads
Latest Posts
வீட்டுக்கு வராதீங்க; அதிரடி அறிவிப்பு.....
சிரிக்கவும், சிந்திக்கவும்................
அறிவோம் ஆன்மீகம்...... கேதாரேஸ்வரர் குகை
கேதாரேஸ்வரர் குகையில் 5 அடி உயரமான சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தை அடைவது மிகவும் கடினம், ஏனெனில் தண்ணீர்  மிகவும் குளிர்ந்து ஜில்லென்று இருக்கும
திறமை வெளிச்சத்திற்கு வருமா?
இப்படியும் சிலர் ..................
ஐடா ஸ்கடர் - யார் இவர் தெரியுமா?
1877ம் ஆண்டு..!நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது... பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை
கருஞ்சீரகத்தின் பயன்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்....
1.புற்றுநோய் ஏற்படாமல் விரட்டகருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளா
இட்லிக்கடை கிட்டு மாமா  - சிறுகதை
கிட்டு மாமாவை யாருக்கெல்லாம் தெரியும், அவரை தெரியணும்னா திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் தாண்டி தெப்பக்குளம் பக்கம் காலேஜ், பின்புற ரோட்டில் பார்க்கலாம்,
Ads