- · 5 friends
-
I
தெரிந்துக் கொள்வோம்....
மஹாபாரதம் படியுங்கள் ; விவரம் நிறைய கிட்டும் . கர்ணன் நல்லவன் ,ஆனால் அவன் இருந்த இடம் வேறு ; சகுனி கெட்டவன் ...யாருக்கு ? எங்கு இருந்தானோ அவர்களுக்கு ? வல்லவர்கள் இருந்தார்கள்.
பீஷ்மர், துரோணர் என்று ...ஆனால் வல்லமை வீணாய்ப்போனது . இது அன்றும் ,இன்றும் புதிதல்ல . 'படித்தவன் சொல் எல்லாம் சபை ஏறுவதில்லை ...பணம் படைத்திருந்தால்,அவன் சொல் சபை மீறுவதில்லை ..எல்லாரும் இங்கே படித்தவரானால், எதுவுமே நடக்காது ; எல்லோரும் படிப்பறிவு இல்லாது இருந்தால் ,அராஜகம் மட்டும் அரங்கேறிடும் . இரண்டும் கலந்து ஜனநாயகம் என்று சொன்னால், எது நடக்கும், எது நடக்காது என்று இறை கூட இங்கே முடிவு சொல்ல முடியாது .
இங்கே கனவுகளும், ஏக்கங்களும் தீர்வதில்லை ; பிரச்சனை போல வளர்ந்து கொண்டே இருக்கும் . இதில் தீர்வு என்று எதுவுமே கிடையாது. பங்களிப்பு கொள்கிறவன், பங்கிட்டு கொடுப்பதில்லை . அதனால் தான் இன்னும் குரங்கு, பூனைகள், ஆப்பம் நீதிக்கதை புதிதாகவே இருந்து கொண்டிருக்கிறது .
பல தவறுகள் பார்த்திருப்பார்கள். மக்களும் பார்த்தவண்ணம் இருந்தார்கள் . மாற்றம் வேண்டும் என்று முடிவு செய்து ,மாற்றம் வந்திருக்கிறது . இவர்கள் நமக்கு புதியவர்கள் அல்லர் . ஆனால் இவர்கள் முன்னே இருக்கும் சவால்கள் எல்லாம் கொஞ்சம் புதிது . இவர்கள் கைக்கொள்ளும் திறமை நமக்கு ஒரு நல்வழி காட்டவேண்டும் .!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·