- · 5 friends
-
I
முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற ஆடி அமாவாசை வழிபாடு
நம்முடைய முன்னோர்களை நினைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடு தான் அமாவாசை வழிபாடு. ஆண்கள் தங்களுடைய தாய், தந்தை, மனைவி போன்றோர் இறந்த பிறகு அவர்களை நினைத்து அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் கணவனை இழந்தவர்கள் மட்டுமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வேறு யாரும் இந்த விரதத்தை இருக்கக் கூடாது.
ஒரு வருடத்தில் வரக்கூடிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. அவை தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை. இதில் புண்ணிய காலம் தொடங்கக்கூடிய ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி பார்க்கலாம்.
காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு விரதம் இருப்பவர்கள் காலையில் எதுவும் சாப்பிடாமல் மதியம் சமையலை செய்து முன்னோர்களின் படத்திற்கு முன்பாக படையல் போல போட்டு வழிபாடு செய்துவிட்டு அதை காக்கைக்கு வைத்து பிறகு அந்த படையலை விரதம் இருப்பவர்கள் எடுத்து வைத்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை தினத்தன்று முடிகளை வெட்டுவதோ, நகங்களை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சுமங்கலி பெண்கள் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு தான் அமாவாசை விரதத்திற்குரிய சமையலையே செய்ய வேண்டும். அமாவாசை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அன்றைய தினம் ஆடி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியுடன் வெள்ளம் கலந்து பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
ஆண் வாரிசு இல்லாத பெற்றோர்கள் இறந்த பிறகு அவர்களின் பெண் பிள்ளைகள் வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அன்றைய தினம் அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வாங்கி தர வேண்டும். மேலும் பச்சரிசி வாழைப்பழம் வெல்லம் போன்றவற்றையும் பசு மாட்டிற்கு வாங்கித் தருவதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளால் பணவரவும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். இதனால் கடன் பிரச்சினை தீரும்.
நம்முடைய முன்னோர்களை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் நீங்குவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். இந்த ஆடி அமாவாசை வழிபாட்டு முறையை அனைவருமே மேற்கொண்டு தங்களுடைய முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெறலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·