-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஜூலை மாதம் 21, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 5 ஆம் தேதி
மேஷம் -ராசி:
வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிக காரியங்களில் தெளிவு பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம் ராசி:
உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆராய்ச்சி கல்வியில் அலைச்சல் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம் -ராசி:
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வருமானத்திற்காக இடம்பெயர்தல் சிலருக்கு உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம் -ராசி:
நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி -ராசி:
ஆன்மிக பணிகளில் புரிதல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவீர்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம் -ராசி:
அரசு பணிகளில் சாதகமான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். கமிஷன் துறைகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்- ராசி:
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடும். கவலை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு -ராசி:
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல்
மகரம் -ராசி:
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முன்கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம் –ராசி:
பழைய முதலீடுகளால் சில சஞ்சலங்கள் ஏற்படும். போட்டி விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதளவில் பற்றற்ற தன்மை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மீனம் -ராசி:
பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·