·   ·  1114 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குறிப்பிட்ட ஆயுள் காப்புறுதி தொகை பணத்தினை உயிர் இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கியே தீரவேண்டும்

 “குறிப்பிட்ட ஆயுள் காப்புறுதி தொகை பணத்தினை உயிர் இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கியே தீரவேண்டும்”

 

இப்படியொரு தீர்ப்பினை சில வருடங்களின் முன்பு கனடிய உயர் நீதிமன்றம் இரு சம்பவங்களில் கனடாவின் காப்புறுதி கம்பனி ஒன்றுக்கு வழங்கி அதனை உடனடியாக அமூல்படுத்துமாறு உத்தரவிட்ட சம்பவம் நீதித்துறை வரலாற்றிலும் பதியப்பட்டுள்ளது.

 

ஆயுள் காப்புறுதியில் உயிர் இழப்பு நடந்தால் எதுவிதமான காலதாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட தொகை பணம் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு போய் சேர்வது என்பது எமது ¼நூற்றாண்டுக்கு மேற்பட்ட கனடாவின் காப்புறுதி தொழில் துறையில் சந்தித்த அனுபவங்களாகும்.

 

ஆனால் இங்கு உயிர் இழப்பினை எதிர்கொண்ட இருவரும் இரு வெவ்வேறு வகையான கொடிய குற்ற செயல்களை செய்யும்போது மரணமானவர்கள் ஆவார்கள்.

 

இங்கு குற்ற செயல்களின்போது ஏற்பட்ட மரணம் என்பதால் காப்புறுதி கம்பனி உயிரிழப்பு நட்டஈடு வழங்குவதனை நிராகரித்தது.

அந்த நிராகரிப்பு இறுதியில் கனடாவின் உயர்நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

 

கனடாவில் வசித்த திரு. றோஜர் அராபிக் ஐஸிஸ் (Mr. Roger Arabic Isis) என்ற முஸ்லீம் தீவிரவாதி ஒருவர் கடந்த ஜனவரி/22/1994 இல் மொன்றியல் டோர்வில் விமான நிலையத்தில் (MONTREAL DORVAL AIRPORT) தனித்து நின்ற விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு பொருத்த போய் தவறுதலாக அது வெடித்து மரணமாகியிருந்தார்.

 

GOULET vs TRANSAMERICA INSURANCE COMPANY

என்னும் வழக்கின் முடிவில் அவரின் ஆயுள் காப்புறுதி தொகை $50,000 டொலர் அவரது மனைவிக்கு வழங்கவேண்டும் என கனடிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

 

இரண்டாவது நபரின் மரணத்தின் காரணம் இன்னொரு மாறுபட்ட வகையில் பயங்கரமானதும் விசித்திரமானதுமாகும்.

 

திரு. போல் ஓல்ட்பீல்ட் (Mr. PAUL OLDFIELD) என்பவர் சுமார் முப்பது ஆணுறைகளில் போதை வஸ்து தூள்களை (cocaine) நிரப்பி அதனை தமது வயிற்றில் கட்டி மறைத்துக் கொண்டு விமான பிரயாணத்தினூடாக வரும் போது தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டு விமான நிலையத்தில் திடீர் இருதய நோய் காரணமாக ஏப்ரல் 27/1996 இல் மரணமாகியிருந்தார்.

 

OLD FILD vs TRANSAMERICA INSURANCE COMPANY

என்னும் இவ் வழக்கின் முடிவில் அவரின் ஆயுள் காப்புறுதி தொகை $250,000 டொலர் அவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என கனடிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

குற்ற செயலின் போது உயிரிழப்பு நடந்தால் ஆயுள் காப்புறுதி கொடுப்பனவு இல்லை என்பது காப்புறுதி சட்ட கோர்வைகளில் இல்லாதிருந்த போதும் காப்புறுதி கம்பனி கொடுப்பனவினை மறுத்திருந்தது.

 

ஆயுள் காப்புறுதி திட்டங்களில் சேர்க்கும் போது, ஏதாவது கிரிமினல் குற்ற செயல் பதிவுகள் உள்ளதா? என்பதும் புலனாய்வு செய்தே கம்பனிகள் சேர்த்து கொள்வார்கள்.

 

ஆனால் சேர்க்கப்பட்ட பின்பு அவர் செய்யும் கிரிமினல் குற்ற செயல்களும் அதனால் ஏற்படும் உயிர் இழப்பாலும் அப்பாவிதனமாக நிற்கும் அவரது குடும்பத்தவர்கள் என்றுமே பாதிக்கப்பட கூடாது என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டு, கனடாவின் ஆயுள் காப்புறுதி கம்பனிகளின் சட்ட கோர்வைகளிலும் உறுதி செய்யப்பட்டு பதியப்பட்ட ஆவணமாக உள்ளது.

 

பொதுவாக காப்புறுதி உடன்படிக்கைகளில் முக்கியமான ஒரு கோட்பாடு இரு பக்கமும் முறையாக பின்பற்றபடல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

 

“அதி உச்ச நேர்மையாக, உண்மையாக விசுவாசமாக (Follow up the doctrine of utmost good faith) எதுவிதமான மறைப்புகளுமின்றி தகவல்களை வழங்கி உடன்படிக்கைகளில் சேர்ந்து கொள்ளுங்கள்.

அங்கு காப்புறுதி என்பது என்றும் கைவிடாது”.

 

அதனையும் மீறி ஏதாவது தப்பு நடந்தால் காப்புறுதி சட்டங்களும், நீதி துறைகளும் என்றும் பாதுகாப்பு அரணாகவிருக்கும் என்பது காப்புறுதியின் தத்துவ கோட்பாடுகளில் உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அந்த நிலைப்பாடுகளில் எந்தவொரு அநியாயங்களும் நடைபெற சாத்தியமேயில்லை என்பதனையும் புரிந்துக் கொள்ள முடியும்.

கனடாவில் தங்களின் காப்புறுதி தேவைகளுக்கு அழையுங்கள்!

சிவ. பஞ்சலிங்கம்

Phone: 416-321-0999

Cell: 416-990-4908

Email: [email protected]

  • 403
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்