- · 5 friends
-
I
சீரக நீர்
உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும், நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தண்ணீருக்கு பதில் சீரக நீர் அருந்தினாலே போதும்.
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் பற்றி பல்வேறு குறிப்புகள் உள்ளன. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்தோ, அல்லது வெந்நீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் 10 நாளில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.
சீரகத்தில் மிகக் குறைவான கலோரியே உள்ளது. மற்ற எந்த ஒரு பானத்தைக் காட்டிலும் சீரக நீர் கலோரி குறைந்ததாகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் விளங்குகிறது.
ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்ட் இதில் உள்ளது. உடலில் ஏற்படக் கூடிய ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் பாதிப்பை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
தினமும் சீரக நீர் அருந்துவது செரிமானப் பணி சீராக உதவும். செரிமானம் சரியாக நடந்தால், உடலின் அத்தனை உறுப்புகளுக்கும் சரியான வகையில் ஊட்டச்சத்து சென்று சேரும். உள் உறுப்புக்கள் ஆரோக்கியம் மேம்படும்.
சீரக நீர் புரதம், கொழுப்பு, சர்க்கரையை சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் செயல்பாட்டுக்கு துணை செய்கிறது. இதனால் செரிமானக் குறைபாடு, வயிறுப்பூக்கு, குமட்டல், வாந்தி போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கான வாய்ப்பு குறைகிறது.
சீரக நீர் உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. வயிறு தொப்பை பிரச்னை உள்ளவர்கள் சீரக நீர் அருந்தி வருவது நல்லது.
சீரக நீர் சில வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன.
இன்சுலின் சென்சிடிவிட்டியைக் மேம்படுத்தும் ஆற்றல் சீரக நீருக்கு உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர விரும்புகிறவர்கள் சீரக நீர் அருந்தலாம். டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
சீரக நீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தைக் காக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட் மற்றும் நுண்கிருமி எதிர்ப்பு திறன் சருத்தை பாதுகாக்கிறது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·