·   ·  157 posts
  •  ·  0 friends
  • 1 followers

புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் நாளை ஆரம்பம் - வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்ரஸ் அறிவிப்பு

வடபகுதி பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்

சீரற்ற காலநிலை காரணமாக நாடுபூராகவும் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. 

எனினும் வடமாகாண காலநிலையை கருத்தில் கொண்டு நாளை பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் எனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கும் செயற்பாடுகளும் நாளை ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரது கடிதத்தின் பிரகாரம்,

க.பொ.த உயர்தர வகுப்பை நாளை ஒவ்வொரு வலய 1A, 1C பாடசாலைகளில் ஆரம்பித்து மாணவரின் வரவினை தற்காலிகப் பதிவேட்டில் பதிவு செய்து அப்பாடசாலையில் கற்ற மாணவர்களினதும் வேறு பாடசாலையிலிருந்து அப்பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களினதும் விபரஙகளினை மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளார்.

மாணவர்கள் க.பொ.த உயர்தர பாடத்துறைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்ட காலப் பகுதியினுள் வருகை தந்த நாட்களின் எண்ணிக்கையானது க.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் போது 80% சதவீத வரவுக்காக கருத்தில் கொள்ளப்படும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர் தரத்தில் கற்பதற்காக வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் போது இந்த தற்காலிக இணைப்புக்கு அமைய ஏதேனும் ஒரு பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டு கற்றிருப்பது முன்னுரிமை வழங்கப்படும் விடயமாக கருத்தில் கொள்ளப்படும்.

மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், இணைப்புக் கால எல்லையினுள் பாடசாலை வரவு மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை, தற்காலிகமாக இணைப்பு பெற்றுள்ள பாடசாலை அதிபர்கள் வழங்க நடவடிக்கையெடுத்தல் வேண்டும் என்பதுடன் அதனை மேலதிக தகுதியொன்றாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காகவும், இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

அத்துடன் மேற்படி 20/2024 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வசதிகள் மற்றும் சேவைகள் கட்டணம், சீருடைகள் மற்றும் மாணவர் விடுகைப் பத்திரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த தடவடிக்கையெடுத்தல் வேண்டும் எனவும் வடமாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

000

  • 471
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய