- · 16 friends
-
S
வரலாற்றில் இன்று வைகாசி 27
வரலாற்றில் இன்று வைகாசி 27
1960 – துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் செலால் பயார் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967 – ஆத்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1971 – மேற்கு செருமனியில் நடந்த தொடருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.
1975 – இங்கிலாந்தில் டிபில்சு பாலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
1980 – தென் கொரிய இராணுவம் குவாங்சு நகரை குடிப்படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. 207 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாந்தர் சொல்செனித்சின் 20 ஆண்டுகளின் பின்னர் உருசியா திரும்பினார்.
1996 – உருசிய அரசுத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் செச்சினியக் கிளர்ச்சியாளர்களைமுதல் தடவையாக சந்தித்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
1997 – முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2001 – இசுலாமியப் பிரிவினைவாதக் குழு அபு சயாப் போராளிகள் பிலிப்பீன்சு, பலவான் நகரில் 20 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இப்பிரச்சனை 2002 சூன் மாதத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டது.
2006 – இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நிகழ்ந்த 6.4 அளவு நிலநடுக்கத்தில் 5.700 பேர் வரை உயிரிழந்தனர், 37,000 பேர் காயமடைந்தனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·