- · 16 friends
-
S
வரலாற்றில் இன்று வைகாசி 26
வரலாற்றில் இன்று வைகாசி 26
1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1917 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை: வடக்கு பிரான்சில், கூட்டு நாடுகளின் படையினர் பிரான்சின் டன்கிர்க் நகரில் இருந்து பெருந்தொகையானோரை வெளியேற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் கலே முற்றுகை முடிவுக்கு வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கசாலா சண்டை இடம்பெற்றது.
1958 – இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 – பிரித்தானியவல் கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1968 – ஐசுலாந்தில் சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.
1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1970 – சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1972 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன், சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1983 – ஜப்பான், வடக்கு ஒன்சூவைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1991 – தாய்லாந்தில் லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.
1998 – திருடப்பட்ட தலைமுறைகள்: ஆத்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் என்ற பெயரில் ஆத்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர்ப் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·