- · 5 friends
-
I
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு (குட்டிக்கதை)
ஒரு சிற்றரசில் அரசன் இருந்தான் அவன் கொஞ்சம் ஆத்திரக்காரன். எல்லாம் அவன் சொன்னபடி சொன்ன நாளில் நடந்து விட வேண்டும் அப்படி அவன் வேலை சொல்லி யாராவது செய்ய வில்லை என்றால் உடனே அவனை கொன்று விடுவான்.
அப்படித்தான் ஒரு நாள் அரண்மனையை பெயிண்ட் அடிக்க ஒரு ஆளை வேலைக்கு அமர்தினான். எப்பொழுது வேலையை ஆரம்பிப்பாய் என்று கேட்க .........
அவன் வரும் வாரம் செவ்வாய் கிழமை வேலையை ஆரம்பிப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.
அந்த வாரம் வந்தது! காலை கண் விழித்த அரசன் காலண்டரை பார்த்தான் புதன் கிழமை.
பெயிண்ட் அடிக்க அவன் வரவில்லை! பொறுத்து பொறுத்து பார்த்து அவன் வரவில்லை என்று கோபம் கொண்டான்.
உடனே தன் வாளை எடுத்து கொண்டு அந்த பெயிண்டர் வீட்டுக்கு சென்றான்.
இரவு தாமதமாக வேலை முடித்து வந்த பெயிண்டர் உறங்கி கொண்டு இருக்க..............
அவனை எழுப்பி ஏன் இன்று புதன் கிழமை நேற்று ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டான்.
அவன் பதில் சொல்லும் முன் தன் வாளால் அவனை கொன்றான்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி அரசனிடம் ஏன் அவனை கொன்றீர்கள் என்று கேட்க......
அதற்கு அரசன் செவ்வாய் கிழமை அரண்மனைக்கு பெயிண்ட் அடிப்பதாக சொல்லிவிட்டு வராமல் போய் விட்டான் அதான் என்றான்.
அவன மனைவி அழுது கொண்டே சொன்னாள் இன்று தான் செவ்வாய் கிழமை! அரண்மனைக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்று நேற்றே எல்லா பொருளையும் வாங்கி வைத்துள்ளார் பாருங்கள்.
நீங்கள் தான் தேதியை தப்பாக பார்த்து வந்துள்ளீர்கள் என்றார்.
அரசனும் வேக வேகமாக அரண்மனை வந்து காலண்டரை பார்க்க தவறி போய் இரண்டு தேதிகளை கிழித்து இருந்தான்.........
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·