- · 5 friends
-
I

ஒரு நாள் விடுப்பு (குட்டிக்கதை)
அலுவகத்தில் வேலைபளு அதிகமாக இருப்பதால் சரி ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என்று குமார்! நினைத்தான் . மேலாளரிடம் சென்று சார் எனக்கு உடம்பு சரியில்லை ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று கேட்டான்!
அதற்கு மேலாளர் என்ன குமாரு நீ லீவே போட மாட்டாயே! என்ன திடீர் என்று, நானெல்லாம் கடந்த பத்து வருடத்தில் ஆபிசுக்கு லீவ் போட்டதே இல்லை தெரியுமா! அதன் காரணத்தை நாளைக்கு சொல்றேன் உனக்கு, சரி இன்னைக்கு போய் நல்லா ரெஸ்ட் என்று சொல்லி அவனை வீட்டுக்கு அனுப்பினார்.
நம்ம குமாரு மகிழ்ச்சியாக சாப்பாட்டுக்கு பிரியாணி , சிக்கன் எல்லாம் வாங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் சென்றான். ஒரே ஒரு தவறு ஆபீஸில் இருக்கும் மனைவிக்கு தான் இன்று ஒரு நாள் விடுப்பில் வீடு வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுக்க போவதாக குறுந்தகவல் அனுப்பினான்.
வீடு வந்து சேர்ந்தவுடன் மனைவி டெலிபோனில் அழைத்தால் என்னங்க வீட்டில் சும்மா தானே இருக்க போறீங்க வீடு ஒரே ஒட்டடையா இருக்கு கொஞ்சம் அடித்து விடுங்க உங்களுக்கு பொழுது போன மாதிரி இருக்கும்.
சரி என்று ஒட்டடை அடிக்க ஆரம்பித்தான்! நல்ல பசி சாப்பிடலாம் என்று போனவன்! செல் ஃபோன் அலறியது!
மறுபடியும் மனைவி! என்னங்க தண்ணீர் தொட்டி ஒரே பாசியாக இருக்கு! நானும் கழுவ ஆள் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து ஒருவனும் வரலை! அப்படியே தொட்டியை கழுவி கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு வைங்க ! உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் என்றார்!
வேண்டா வெறுப்புடன் தொட்டியை கழுவ சென்றான் ! ஒன்னரை மனி நேரம் வேலையை முடித்து விட்டு ஆசையாய் பிரியாணி பொட்டலத்தை பிரித்தான்! மறுபடியும் ஃபோன் அலறியது!
மனைவி! என்னங்க கிட்சன்ல இருக்கும் பைப் மரை கழண்டு தண்ணி அதிகமா லீக் ஆகுது! இந்த சின்ன வேலைக்கு எந்த பிளம்பரும் வர மாட்டிக்குறான்! கொஞ்சம் பாருங்களேன்! எனக்கு மட்டும் எல்லாமே மறை கலண்டதா வருது என்னமோ போங்க! என்றாள்.
பிரியாணியை ஓரம் வைத்து விட்டு காரியத்தில் இறங்கினான்!
இப்படியே அன்றைய பொழுது ஓடியது!
மறுநாள் ஆபீஸ் போனவுடன் மேலாளர் குமாரை பார்த்து சொன்னான் !
இப்ப புரியுதா குமாரு நான் ஏன் கடந்த பத்து வருடமாக லீவ் எடுப்பதில்லை என்று!
குமாரு நன்றாக மண்டையை ஆட்டினான்.........,

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·