- · 5 friends
-
I

தகுதி - விக்கிரமாதித்தன் கதை (குட்டிக்கதை)
விக்கிரமாதித்தன் மன்னரிடம் வேதாளம் ஒரு கேள்விகேட்டது.. ஒருவர் நடத்தை அல்லது செய்கையை வைத்து அவரின் தகுதியை கூற முடியுமா? என்று.
சரி என்று விக்ரமாதித்தன் கூற
அழகான மூன்று பெண்கள்.மூவரும் அச்சில் வார்த்து எடுத்தது போல் ஒரே தோற்றம் நடை.
இதில் ஒருத்தி இளவரசி. இன்னொருத்தி அவள் தோழி.மற்றும் ஒருத்தி பணிப்பெண்.
இவர்களில் யார் இளவரசி.யார் தோழி யார் பணிப்பெண் என அடையாளம் காணவேண்டும்.
போட்டி துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட ஒரு அறை. அதில் ஒரு குத்து விளக்கு ஏற்றப்பட்டு இருக்கிறது.
மன்னர் இருக்கும் அறையில் முதலாவதாக ஒரு பெண் வருகிறார்.இது யாராய் இருக்கும் எப்படி இனம் காண்பது.
முதலாம் பெண் வரும் போது, விக்ரமாதித்தன் விளக்கின் அருகில் வைக்கப் பட்ட எண்ணைப் பாத்திரத்தில் சிறிதை கீழே சிந்தினார்.
அந்த பெண் கீழே எண்ணை சிந்தி இருந்ததைப் பார்த்து அருகில் இருந்த துணியில் வழித்து துடைத்தார்.
பின்னர் இனன்னொரு பெண் வந்தாள் அவள் வரும்போதும் இந்த தவறு நடந்தது. அவள் அந்த சிதறிய எண்ணையை வழித்து தன் தலையில் தடவிக் கொண்டாள்.
மூன்றாவதாக வந்தவள் கீழே சிதறி இருந்த எண்ணையை பார்த்து தன் கையை தட்டி சேடிப் பெண்களை அழைத்து அந்த சிதறிய எண்ணையை துடைக்க ஆணையிட்டார்.
ஆகவேகீழே சிந்திய எண்ணையை தலையில் தடவியவள் வேலைக்காரி.கீழே சிந்திய எண்ணையை துணியால் துடைத்தவள் தோழி.
சேடிப் பெண்களை விழித்து அந்த சிந்திய எண்ணையை துடைக்க கூறியவள் தான் இளவரசி என்றாராம்.
ஒரே காட்சி.மூன்று பெண்கள்.அவர்கள் செயல் நடத்தை அவர்களை ஏதோ ஒரு விதத்தில் இனம் காட்டும் என்பது தான் இதன் சிறப்பு.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·