- · 16 friends
-
S
வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று வைகாசி 07
1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.
1920 – சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1930 – 7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: செருமனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எசுப்பானியா வந்து சேர்ந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று சோகோகோ என்ற சப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் செருமனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.
1952 – நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 – வியட்நாமில் "தியன் பியன் பு" சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1960 – பனிப்போர்: அமெரிக்காவின் யூ-2 போர் வானூர்தியின் விமானி காரி பவர்சு என்பவரைத் தாம் பிடித்து வைத்திருப்பதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் அறிவித்தார்.
1986 – ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனடியர் ஏற்படுத்தினார்.
1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பெப்ரவரியில் திருடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) மீளக் கைப்பற்றப்பட்டது.
1999 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உருமேனியா சென்றார். 1054 இல் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் கிழக்கு மரபுவழி திருச்சபை நாடொன்றுக்கு திருத்தந்தை சென்றது இதுவே முதல் தடவையாகும்.
1999 – கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
1999 – கினி-பிசாவு நாட்டின் அரசுத்தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000 – விளாதிமிர் பூட்டின் ரஷ்யாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் உயிரிழந்தனர்.
2004 – அமெரிக்கத் தொழிலதிபர் நிக் பெர்க் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
2007 – உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இஸ்ரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·