- · 0 friends
-
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பமாகின்றது. அத்துடன் இன்றுமுதல் ஆரம்பமான குறித்த பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் குறித்த பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூரத்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி தெற்கு மற்றும் வடக்கு கல்வி வலயங்களில் இவ்வாண்டு 33 பரீட்சை நிலையங்களில் 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
பாடசாலை ரீதியாக 3,519 பரீட்சார்த்திகளும் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4,026 மாணவர்கள் பரீட்சை தோற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் 1343 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இவ்வாறு மாற்றம் பதிவாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென மொத்தமாக ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 485 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த மீள் பரிசீலனை பெறுபேறுகள் கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·