·   ·  1014 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – ஏப்ரல் மாதம் 12, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 30 ஆம் தேதி

மேஷம் -ராசி:

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் ஆதாயம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம் ராசி:

எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி

மிதுனம் -ராசி:

குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலை விலகும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கடகம் -ராசி:

சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

சிம்மம் -ராசி:

வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாளுவது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

கன்னி -ராசி:

தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம் -ராசி:

மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கமிஷன் சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப மேன்மை ஏற்படும். சகோதரர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக திறமையால் மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விருச்சிகம்- ராசி:

புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடிவரும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

தனுசு -ராசி:

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். உற்பத்தி தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கால்நடைகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம் -ராசி:

சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனை அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

கும்பம் –ராசி:

நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது சிக்கல்களை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான சிந்தனை பிறக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புதிய வீடு வாங்குவது சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மீனம் -ராசி:

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். பெரியவர்கள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுத் தொடர்பான துறைகளில் அரசு உதவிகள் சாதகமாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். ரசனை தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 637
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்