-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஏப்ரல் மாதம் 9, 2024
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 27 ஆம் தேதி
மேஷம் -ராசி:
சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
ரிஷபம் ராசி:
எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் குணம் அறிந்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம் -ராசி:
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம் -ராசி:
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம் -ராசி:
பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி -ராசி:
புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். உடன் பிறந்தவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம் -ராசி:
விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்- ராசி:
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு -ராசி:
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம் -ராசி:
உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம் –ராசி:
மனதில் புதுவிதமான திட்டங்களை உருவாக்குவீர்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம் -ராசி:
குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வரவுக்கு மீறிய சில செலவுகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சகோதரர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சாந்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·