·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்ததில் பிடித்தது பகிர்ந்தேன்

இன்று காலை ஒரு கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு...

வழக்கம் போல ஹிந்தியில் ஆரம்பித்தார்கள்...

நானும் வழக்கம் போல (ஹிந்தி தெரிந்தும்) தமிழில் ஆத்திசூடி சொன்னேன்...

மறுபடியும் வழக்கம் போல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்கள்... ஆனால் வழக்கம் போல நான் ஆங்கிலத்தில் பேசவில்லை (சமீபகாலமாக பல நம்மூர் பெரியவர்கள் ஆங்கிலம் தெரியாமல் இத்தகைய கஸ்டமர் கேர் அழைப்பு களில் அவதிப்படுவதை பார்த்த பின் முடிந்தவரை தமிழிலேயே கஸ்டமர்கேரிடம் பேசுகிறேன்)

இறுதியாக

"ராஜகோபாலன் சார்...விச் லாங்குவேஜ் யூவார் கம்ஃபடபிள் வித்" என்றது எதிர்க்குரல்

"ஐம் கம்ஃபடபிள் ஒன்லி வித் தமிழ் என்றேன்"

ஒரு வித குழப்பத்தில் ஃபோன் கட் செய்தார்

IT அலுவலகத்தில் ஆங்கிலம் தானே பேசுகிறீர்கள் என நீங்கள் வாதம் வைக்கலாம்

IT அலுவலகத்தில் மொழி இல்லா சமவெளி...க்ளோபல் கம்யூனிகேஷன்... இங்கு பொதுமக்கள் தொடர்பு கிடையாது... பப்ளிக் சர்வீஸ் இல்லை

ஆனால் இத்தகைய கஸ்டமர் கேர், நம் மண்ணின் சொத்து எடுத்து நம் மக்களின் பணத்தை வைத்து வியாபாரம் செய்யும் பெரு முதலாளிகளின் முகம்... இந்த மண்ணின் கஸ்டமர்களுக்கு கேர் என சொல்லிவிட்டு இந்த மண்ணின் மொழி தெரியாத ஆட்களை பணியில் அமர்த்துவது எவ்வளவு பெரிய கயவாலித்தனம்... இவனுங்க காசு வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஏற்றவாறு நாங்க மாற மாட்டோம், எங்கள் மொழியில் தான் இவர்கள் பேச வேண்டும் என்கிற திமிர்.

திமிர் க்கு திமிர் தான் காட்ட வேண்டும்.

அதுக்கு தான் யார் எடுத்தவுடன் ஹிந்தியில் பேசினால் நான் ஆத்திசூடி சொல்லி அவர்களை நல்வழி ப்படுத்த முயற்சி ப்பேன்

இப்படி இருக்க மறுபடியும் அதே கஸ்டமர் கேரிடமிருந்து கால்.... இம்முறை செந்தமிழில்

வணக்கம் சார் என்று ஆரம்பித்து எதிர்க்குரல்

பேசி முடித்தபின்

"ஏன்ங்க முன்னாடி தமிழில் பேசாமல் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பேசினாங்க" என்றேன்

"சார் ஆங்கிலம் ஹிந்தி அதிகம் பேர் கஸ்டமர்கேரில் இருக்காங்க சார்... தமிழ்ல குறைவுதான் " என்றார்

நாம இந்த பெரு முதலாளிகளின் திமிர் க்கு திமிர் காட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் நாம நினைத்தால் இங்கே நம்மூரில் பலருக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும் என்றே தோன்றியது

எந்த கஸ்டமர்கேர், வங்கிகள், இன்சூரன்ஸ் என எந்த கால் வந்தாலும் தமிழில் இல்லையெனில் "தமிழ் வேண்டும்" என சொல்லி துண்டித்து விடுங்கள்..

உங்களுக்கு பல மொழிகள் தெரிந்து இருந்தாலும்... இப்படி பெரும்பாலானவர்கள் செய்தோம் என்றால் தமிழ் பேசக்கூடிய பலரை அவர்கள் பணியமர்த்த தான் வேண்டும் அந்த கட்டாயம் ஏற்படும்...

இதை ஒரு உறுதிமொழியாக எடுத்து செய்வோம்....

மறவாதீர்கள் நீங்கள் துண்டிக்கும் ஒவ்வொரு ஆங்கில ஹிந்தி அழைப்பும் வேலை இல்லா ஒருவர் க்கு வேலை வாங்கி தர முடியும் ...

இதல்லாமல், எதாவது காசு போட்டுட்டு இல்ல சாமான் வாங்கி போட்டுட்டு ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தால் தான் உங்களுடைய வேண்டியவை கிடைக்கும் என அநீதி இழைக்கப் படும் ஒரு மூதாட்டி க்கு நல்லது செய்தது போலவும் ஆகும் .

மற்றவர்களிடமும் இந்த வேண்டுகோளை வையுங்கள்...

  • 832
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்