Support Ads
Main Menu
 ·   · 109 posts
  •  · 2 friends
  •  · 2 followers

இறைவனை நம்பு

மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.


ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..


விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம்  என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..


நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...


உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம்  இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...


முதலாமவர் தயங்கியவாறே  சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...


அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...


இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...


கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...


அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...


அவன்  பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... 


என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும்  இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...


தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...


....... என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு..... நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம்  தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....


சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,


புனித ராமாயணம்   இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்......ஆச்சர்யம்


ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில்  செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை  தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...


யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....


அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...


செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...


மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...


வாலிபன்  தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்.....


இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா …

நம்பிக்கை.............

அவன் பணத்தை நம்பியிருந்தால் அது பத்து நாட்கள் தன் உதவியிருக்கும். ஆனால் அவனோ பகவானை நம்பியதால் காலத்திற்கும் கை கொடுத்துவிட்டான் கடவுள்.......

இராமாயணத்தின் மூலம்.

0 0 0 0 0 0
  • 136
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
இராவணனிடம் உபதேசம் பெற்ற இராமன்
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட இராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவ
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மருத்துவர்கள்  கூறும் அறிவுரை!
உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.ஆரோக்கியமான உணவ
சிவபார்வதியின் முன் காலை நீட்டிய அவ்வை.!!
  •  · 
  •  · beesiva
ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித
குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான வ
மாற்றங்கள் எப்படி ஏற்படும்?
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!நீங்களும் எங்களோடு வந்தால் நன்றா
கோவில் வாசற்படியை மிதித்து உள்ளே செல்வது சரியா?
கோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா? இல்லை தாண்டி செல்ல வேண்டுமா?
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்
  •  · 
  •  · beesiva
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு  ......உண்பவர்களா..... சைவர்கள்
எங்கே செல்கிறோம்?
சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழம
திருப்பதியில்கோடி கோடியாய் கொட்டிய பணம்
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்
எனது  அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது.
           கனடாவை  சேர்ந்த  வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன்  ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சுமார் 200 கு
தோட்டத்தில் இரகசியமாக தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
கம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை த
Ads
Latest Posts
எது கெடும் ? - ஔவையார் கூறியது....
கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......(01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெ
சக்தி வாய்ந்த மந்திரம்
ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர் அவரை
அனுமனை பிடித்த சனீஸ்வரர்
ராமர் ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன் அங்கதன் அனுமன் மற்றும்
வணங்குவோம்.....
ஸ்ரீராமா.....
அறிவோம் - சிவபுராணத்தின் பெருமைகள்
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி  மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.2. வந்தவர் ம
விந்தணுக்களை அதிகரிக்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
  •  · 
  •  · beesiva
விந்துவைக் கெட்டியாய் ஆக்கிவிடும் வெண்டைக்காய்,கூட்டி விடும்வெண்டைப் பிஞ்சு.அதிமதுரம் சேர்த்தால் பெருகும் புதுஉதிரம்,சர்வமும் சீராகும் ஆம்.கருத்தரிக்க
துளசிதேவியின் மகிமை
துளசியின் மகிமையை முழுவதும் வர்ணிக்க இயலாது என்றாலும், பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில குறிப்புகள்...ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான மற்றும
சுகம் தரும் அசோகாஷ்டமி
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வட மொழியில் அசோகம் என்று பெயர்.பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில்வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்ப
கிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்?
கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.கிணறுகள் எங்கு இ
இதய நோய்களை தீர்க்கும் கோவில்.......
இதய நோய்களை தீர்க்கும் கோவில்.......
அறிவோம் ஆன்மீகம்.......
திருவண்ணாமலை.....
விதி ......
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்..ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது..அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது ப
Ads