- · 5 friends
-
I
இப்படியும் ஒரு தபால்காரர்....
அன்றாடம் 15 கி.மீ.,துாரம் வனங்களுக்குள் நடந்து சென்று தபால் பட்டுவாடா செய்து வந்த சிவன் தற்போது ஒய்வு பெற்றுவிட்டார்.
தான் நடந்து சென்று வந்த பயணங்களின் நினைவுகளை தற்போது அசை போட்டபடி இப்போது இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் சிவன்,
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் துறையில் பணியாற்றி வந்தார்.
ஹில்குரோவ் தபால் நிலையத்திற்கு வந்த பிறகுதான் இவர் மக்கள் போற்றும் தபால்காரரானார்.
காரணம் வனப்பகுதிக்குள் வாழும் பழங்குடியின மக்கள் உள்ளீட்டவர்களுக்கு தபால் கொடுப்பதற்காக காட்டுக்குள் 15 கி.மீ துாரம் சலிக்காமல் நடந்து சென்று வந்தார்.
ஒரு தபால் கார்டு என்றாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கியம்தான் என்ற மிதமிஞ்சிய பொறுப்புடன் சென்று சம்பந்தப்பட்டவர்களை நேரில் பார்த்து கொடுப்பார்
அதில் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் படித்தும் காட்டுவார்.
வனங்களுக்குள் சென்று வரும் போது பல முறை கரடி,காட்டெருமை,யானை உள்ளீட்ட விலங்குகளை பார்த்திருக்கிறார்
ஆனால் இதுவரை அவைகள் இவரை எதுவும் செய்தது இல்லை
அவைகளுக்கு தெரியும் போலும் மக்கள் சேவகர் இவர் என்று.
சிங்காரா வனப்பகுதி, ஹில்குரோவ் ரயில்பாதை, வடுக தோட்டம், கே.என்.ஆர், பழங்குடியின கிராமங்கள், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்
அங்குள்ள எளிய மக்களுக்கு சிறு சேமிப்பு,முதியோர் உதவித்தொகை பற்றி எல்லாம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
காட்டு வழியாக தனியாக செல்லும் போது மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை உச்சரித்தபடி செல்வராம்.
சமீபத்தில் ஒய்வு பெற்ற இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இவர் ஒய்வு பெற்றது தெரியாமல் கிராமத்து மக்கள் இவரைக் காணாமல் தேடிவந்து பின் விவரம் அறிந்ததும் உங்களைப் போல யாரும் எங்களுக்காக சேவை செய்ய முடியாது என்று கண்ணீர்விட்டபடி சொல்லிச் செல்கின்றனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·