·   ·  104 posts
  • 2 members
  • 2 friends

தை அமாவாசையில் நிகழ்ந்த அற்புதம்

அபிராமி பட்டரால் அபிராமி அந்தாதி பாடப்பட்ட நாள். பட்டரின் பக்தி வைராக்கியத்தை அகிலத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக அன்னை தனது காதணியை வானில் கழற்றி எறிந்து அமாவாசை நாளினை பௌர்ணமி நாளாக்கிய நாள். தை அமாவாசை இன்று.
அபிராமி பட்டர்
திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர்.  இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.
ஆனால், ஊரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர்.  ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.  அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.  
ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா  பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 
மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்.
உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்.
ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க... 
அதற்கு பட்டர் முடியும் என்றார்...!?
இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது…
அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை!
உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். 
‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.
பின்பு,
‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார்...
ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79 வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.
உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச...
அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.  
‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற,
பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். 
மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.
ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடவூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்...
அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்.
அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16.முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28.இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.
48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன் தீரும்.
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம்.
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
60.மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.
65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.  
 67. பகைவர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.
81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.
84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம்.
97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.
  • 229
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்