- · 5 friends
-
I
கணவன், மனைவி இருவரும் ஒரு தட்டில் சாப்பிடலாமா?
கணவனும் மனைவியும் ஒன்றாக ஒரு தட்டில் சாப்பிட்டால், அவர்களுக்கு இடையேயான காதல் அதிகரிக்கும் என்று மக்கள் பொதுவாக நம்புகிறார்கள். அதே சமயம் இதெல்லாம் பழைய காலத்துச் சாஸ்திரம் இப்போதெல்லாம் பின்பற்ற முடியாது என சொல்பவர்களும் உண்டு. கணவன், மனைவி ஒரே தட்டில் சாப்பிடுவது நன்மை தருமா அல்லது தீங்கு விளைவிக்குமா என இன்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மகாபாரதத்தில், கணவன், மனைவி சேர்ந்து ஒரு தட்டில் சாப்பிடுவதால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாபாரதப் போருக்குப் பிறகு, யுதிஷ்டிரர், தனது சகோதரர்களுடன், பீஷ்மரிடம் ஞானம் பெற சென்றார். யுதிஷ்டிரர் தாத்தாவிடம் சென்று நல்ல அரசியல் செய்வது எப்படி, தான் ஆளும் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து கேள்வி கேட்டார்.
நாட்டின் முன்னேற்றம் மக்களிடையே உள்ள புரிதல் மற்றும் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள புரிதலை வைத்து தான் அமைகிறது. மக்களின் புரிதல் அதிகரிக்க மக்கள் எந்த வகையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். யாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது குறித்து உணவின் மூலம் நல்ல அறிவைப் புகட்டினார் பீஷ்மர்.
வீட்டில் பெற்றோர், சகோதரர் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு அமிர்தம் போல கருதப்படுகிறது. இப்படி ஒன்றாக அமர்ந்து உணவை உண்பதன் மூலம், குடும்பம் முன்னேற்றம் அடைகிறது, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வீட்டில் லட்சுமி குடி கொண்டு சுப பலன்களைத் தருவார். பாண்டவர்கள் எப்போதும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்டு சாப்பிட்டதால் எப்போதும் ஒற்றுமையுடன், ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.
பீஷ்மா பிதாமகர் கருத்தின்படி ஒருவருக்கு ஒவ்வாத அல்லது அறிவை மழுங்கச் செய்யக்கூடிய உணவை ஒருபோதும் உண்ண வேண்டாம். இது அந்த நபரின் உடல் நலனைக் கெடுத்து தேவையற்ற வீண் செலவை கொண்டு வரும். இதனால் வீட்டில் வறுமை வரக்கூடும். ஒருவர் தனக்கு ஒவ்வாத உணவை மட்டுமல்லாமல் இந்த சமூகத்தை மாசுபடுத்தக்கூடிய உணவையும் தவிர்க்க வேண்டும்.
கணவன்-மனைவியுடன் ஒரு தட்டில் உணவை சாப்பிடுவது நல்லதாக கருதப்படுவதில்லை என்று பீஷ்மர் கூறுகிறார். கணவன் மனைவி ஒன்றாக மற்றும் ஒரு தட்டில் சாப்பிடுவது அன்பை அதிகரிக்காது. தற்போதும் கூட கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வருகிறது. இது இருவரிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். கணவனுக்கு பிடிக்காத உணவை மனைவி அல்லது மனைவிக்கு பிடிக்காத உணவை கணவன் பகிர்ந்து சாப்பிடுவதால் இருவரிடையே அன்பு அதிகரிப்பதற்குப் பதிலாக மன கசப்பு தான் ஏற்படும்.
இது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகள் ஏற்படுத்தக்கூடும். நாம் உணவை விருப்பப்படாமல் பொய்யாக சாப்பிட்டால், நம் வாழ்க்கையில் பல மோசமான விளைவுகள் ஏற்படலாம். அதோடு விருப்பமில்லாத உணவை சாப்பிடுவது நம் செல்வத்தை இழக்கச் செய்கிறது.
கணவனுக்குப் பிடித்த உணவை மனைவி அன்புடன் பரிமாறலாம். அல்லது இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·