- · 5 friends
-
I
கடவுளுக்கு நைவேத்தியம் எப்படி படைக்கவேண்டும் என தெரிந்து கொள்வோமா?
வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். ஆனால் படைப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. அதன்படி படைப்பது தான் கடவுளை மகிழ்விக்கும். படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு அது பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது.
நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம். நைவேத்தியத்தை படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும். கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது. நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.
நைவேத்தியத்தை படைப்பதற்கு முன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் வடடமாக கோலமிட்டு அதன் பிறகு அந்த கோலத்தின் மீது நைவேத்தியம் அடங்கிய வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.
நைவேத்தியத்தை படைக்கும்போது வாழை இலையை அல்லது பிரசாதத் தட்டைச் சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். (இந்த செயல் மண்டலத்தை சுத்தி செய்தல் என்று அறியப்படுகிறது) தண்ணீரை இடமிருந்து வலமாக மீண்டும் தெளிக்கக்கூடாது.
இரண்டு துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து பரிமாறப்பட வேண்டும். ஒரு துளசி இலையை நைவேததியத்தின் மீது வைக்க வேண்டும். மற்றொரு இலையை தெய்வத்தின் புனிதமான பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு இடது கையின் கட்டை விரலை இடது கண் மீதும் இடது கையின் மோதிர விரலை வலது கண் மீதும் வைத்து கண்களை மூடியபடி இருக்க வேண்டும்.
நைவேத்தியத்திலிருந்து வரும் நறுமணத்தை வலது கையின் விரல் நுனிகளைப் பயன்படுத்தி கடவுளை நோக்கி செலுத்த வேண்டும். பிறகு, 'நைவேத்ய மத்யே பானியம் சமர்ப்பயாமி’ என்கிற மந்திரத்தை ஜெபித்தபடி பஞ்ச பாத்திரத்தில் வலது கையால் சிறிது நீரை விடவும். பிறகு பஞ்ச பிராணங்களுடன் தொடர்புடைய ‘ஓம் பிராணாய’ என்கிற மந்திரத்தை மீண்டும் ஒருமுறை ஜெபிக்கவும். பிறகு, ‘நைவேத்யம் சமர்ப்பயாமி, உத்தராபோஷனம் சமர்ப்பயாமி, ஹஸ்தே சமர்ப்பயாமி, முகே சமர்ப்பயாமி’ என்று ஜெபித்தபடி வலது கையிலிருந்து தட்டில் நான்கு முறை தண்ணீர் விடப்பட வேண்டும்.
நாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் கடவுளை சேருகின்றது என்றும், தெய்வம் அதை சாப்பிடுகின்றார் எனவும் நாம் ஒரு பக்தி பாவத்தை கொண்டிருக்க வேண்டும். நைவேத்தியத்தை படைத்த பிறகு மீதமுள்ள மொத்த உணவில் அதை கலந்துவிட வேண்டும். இதனால் உணவை சாப்பிடும் அனைவரும் பயன்பெறுவர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·