- · 5 friends
-
I
விநாயகரைக் கண்டு மிரண்ட எமன் - அறிவோம் ஆன்மீகம்
ஆன்மீகத்துக்கும்,அழகுக்கும் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அப்படி விநாயகருக்கும் இந்த இடம் புகழ் பெற்றதாக இருக்கிறது இந்த தலம். எமனுக்கு பாடம் புகட்ட விநாயகர் அமைத்த தலம்.
எமதர்மன் தான் தான் உலகில் எல்லார் உயிரையும் எடுக்கிறேன் என்று கர்வம் கொண்டு,தான் பெரியவன் என்ற மமதையுடன் இருந்தாராம்.அப்போது அவருக்கு பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான் விநாயகரை அனுப்பி பார்க்கச் சொன்னாராம்.
விநாயகரும் எமனைச் சந்திக்க சென்றார்.
விநாயகர் எமனின் கர்வத்தைப் போக்க முயற்சிக்கும்போது,எமனின் மகன் இடையில் வர,அவனைத் தண்டிக்க முற்படுகிறார் விநாயகர்.இந்நிலையில்,எல்லாம் இழந்து நிற்கதியாய் நிற்கும் எமன்,விநாயகரிடமிருந்து தன் மகனைக் காப்பாற்றும்படி,சிவபெருமானிடம் வேண்டுகிறார்.எல்லார் உயிரையும் எடுக்கும் எமதர்மன்,தன் மகன் உயிருக்காக சிவபெருமானிடம் தான் சென்று கேட்க வேண்டியிருக்கிறது.அப்படியானால்,யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் எமனுக்குள் தோன்ற,தன் கர்வத்தை நினைத்து வருத்தம் கொள்கிறார்.
விநாயகர் தன் திருவிளையாடலால்,இத்தனையும் செய்து எமனின் கர்வத்தை அடக்கினார்.அதன் பிறகு, தான் கர்வத்தில் எல்லா மனிதர்களையும் பயமுறுத்தியதும்,எமனுக்கு மனதை உறுத்தியது.இதனால் விநாயகப் பெருமானிடம் தன் பாவம் நீக்குமாறு வேண்டுகிறார்.
அதன்படி,தானே எமனுக்கு ஒரு தலத்தை உருவாக்கி, அங்கு எமனை வீற்றிருக்க செய்கிறார்.கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து காரமடை வழியாக சத்தியமங்களம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது சிறுமுகை.
இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் எனவும், இங்கு அதிக அளவில் யாரும் வருகை தருவதில்லை எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு விஷயம் மட்டும் ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்த கோவிலுக்கு சரியாக பௌர்ணமி நாளில் வந்து வேண்டிக் கொண்டால் ஆயுள் நீடிக்குமாம்.
இந்த கோவிலுக்கு நோயுடன் வருபவர்கள் சரியாக ஒரே மாதத்தில் பிணி நீங்கி நல்ல உடல் நலம் பெறுகிறார்கள்.இது எமன்,விநாயகருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாகத்தான் என்கின்றனர் மக்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·