• 199
Support
Post Home

Post Home

Ads

ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? ஜோதிகா படத்தின் இயக்குனர்.

ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? விளக்கம் கூறும் ஜோதிகா படத்தின் இயக்குனர் சரவணன்.
 
சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான்.
 
ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா?
ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.
 
அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்...” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார்.
 
இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்...” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!
நன்றி: சரவணன் ராமசாமி
0 0 0 0 0 0
Info
Category:
Created:
Updated:
 ·   · 26 posts
 •  · 3 friends
 •  · 3 followers
Comments (1)
 • 0 0 0 0 0 0
  Not logged in users can't 'Comments Post'.
  Ads
  Featured Posts
  பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் நோய் தொற்று காரணமாக காலமானார்.
  ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் இர்பான் கான். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு இறக்கும் போது வயது 54. சில தினங்களுக்கு முன்பு இவரது தாயார் சாயிதா பேகம் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது இறுதி சடங்கில் கூட இர்பான் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார். இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்தார். இந்த நிலையில் இர்பான்கானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை
  ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? ஜோதிகா படத்தின் இயக்குனர்.
  ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? விளக்கம் கூறும் ஜோதிகா படத்தின் இயக்குனர் சரவணன்.   சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய
  ஊரடங்கை தளர்த்தியதால் இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
  இலங்கையில் ஊரடங்கு அமலில் இருந்த காலம் வரை கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருத்தது.  கடந்த 20ம் தேதி இருந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது.  ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 20ம் தேதி முதல் இன்று வரையிலான ஒன்பது நாட்களில் மட்டும், புதிதாக, 348 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, கொரோனா தொற்றுக்கு 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் 2,000 கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கும் வசதியுள்ளது.   அதனால், இலங்கையில் மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
  இன்று ஒன்ராறியோவில் புதிதாக 459 கொரோனா தொற்று
  இன்று ஒன்ராறியோவில் புதிதாக 459 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாகாண மொத்த எண்ணிக்கை 16,187 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 86 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.  இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு.  மொத்தமாக 1,082 ஆக உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 10,205 மீண்டுள்ளனர்.
  உலகம்முழுவதும் 30 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று
  உலகம் இன்று(ஏப்.,28)  முழுவதும் 30 லட்சத்து 63 ஆயிரத்து 814 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 213,273 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் எண்ணிக்கை 906,898 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,313 ஆக அதிகரித்துள்ளது. 973 பேர் பலியாகி உள்ளனர். 22,034 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,306 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மொத்தம் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 369 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவில் 10 லட்த்து 21 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலியா
  ஒரு பானைக்கு எத்தனை பேருடா? முடியல சாமி
  ஒரு பானைக்கு எத்தனை பேருடா? முடியல சாமி
  மாத்தளை இளைஞர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் பரிசோதனை பெட்டி
  மருத்துவர்களை பாதுகாத்து கொண்டு பொது மக்களை வைரஸ் பரிசோதனை செய்யும் பெட்டி ஒன்று மாத்தளை இளைஞர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . இதன் முதல் நிர்மானம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
  Support us