-
- 3 friends
இன்றைய ராசி பலன் – டிசம்பர் 2, 2023
இன்றைய ராசி பலன் – டிசம்பர் 2, 2023
தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி | |
மேஷம் Aries
| உயர் அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு |
ரிஷபம் Taurus | நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் |
மிதுனம் Gemini | அக்கம்-பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வழக்கு பிரச்சனைகள் குறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில அதிஷ்ர்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா |
கடகம் Cancer | தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளால் சில சிக்கல்கள் உண்டாகும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், பயமும் அதிகரிக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிரமம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
சிம்மம் Leo | பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் சில நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை வெளிப்படும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை |
கன்னி Virgo | எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தனவரவுகள் திருப்தியை தரும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் |
துலாம் Libra | தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். கலைப் பொருட்களால் சில விரயங்கள் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் மேன்மை உண்டாகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
விருச்சிகம் Scorpio
| வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வ சிந்தனைகள் மனதளவில் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் |
தனுசு Sagittarius | கூறும் கருத்துகளில் கவனம் வேண்டும். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வரவுகளில் கவனம் வேண்டும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
மகரம் Capricorn | நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் |
கும்பம் Aquarius | பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் |
மீனம் Pisces | அதிரடியாகச் செயல்பட்டு இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசாங்க காரியங்களால் அலைச்சல்கள் ஏற்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். சிக்கனமாகச் செயல்பட்டுச் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·