-
- 3 friends
இன்றைய ராசி பலன் – டிசம்பர் 1, 2023
இன்றைய ராசி பலன் – டிசம்பர் 1, 2023
தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி | |
மேஷம் Aries
| உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் உங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
ரிஷபம் Taurus | பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தைத் தரும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் |
மிதுனம் Gemini | உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையில் புதிய நபர்களால் அனுகூலம் ஏற்படும். புதுவிதமான ஆடை சேர்க்கை உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
கடகம் Cancer | வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்கள் குறையும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்துவந்த விருப்பங்கள் நிறைவேறும். அலட்சியப் போக்கைக் குறைத்துக் கொள்ளவும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் |
சிம்மம் Leo | உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியக் கூடிய செயல்கள் கூட தாமதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கிக் கடன்கள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
கன்னி Virgo | குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புத்திரர் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் |
துலாம் Libra | குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட வருத்தம் குறையும். கௌரவப் பட்டங்கள் மற்றும் பதவிகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நேர்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா |
விருச்சிகம் Scorpio
| பொருளாதார நெருக்கடியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழ் உண்டாகும். உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் |
தனுசு Sagittarius | தேவையில்லாத சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். எந்த செயலையும் நிதானத்துடன் செய்யவும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் |
மகரம் Capricorn | பணவரவு தாராளமாக இருக்கும். சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்பத்துடன் சிறு தூரப் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை |
கும்பம் Aquarius | எண்ணிய பணிகளை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவும், லாபமும் மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தம்பதியர்களுக்குள் புரிதல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
மீனம் Pisces | வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் சிக்கனமாகச் செயல்படவும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·