-
- 3 friends
சனி பெயர்ச்சி பலன் 2023 - இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பம் அமையும்
சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் சனிபகவானால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
சனி தரும் பதவி யோகம்: சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
சனி தரும் தண்டனை: ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. எனவேதான் "சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை" என்று சொல்வார்கள். சதயம் நட்சத்திரத்தில் இந்த மாதம் முதல் பயணம் செய்யும் சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்:
ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ரிஷபம்:
சனி பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனி பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் விழுவதால் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது. நான்காம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் குரு பகவானும் 11ஆம் வீட்டில் அமர்ந்து லாபத்தை தருகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.
கன்னி:
உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்யும் காலம் பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள்.
தனுசு:
கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. உங்களுடைய வாழ்க்கையில் இனி நல்லவைகளை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.
செய்ய வேண்டிய பரிகாரம்......
சனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். காகத்திற்கு தயிர் கலந்த எள் சாதம் வைத்து வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·