-
- 3 friends
அதிர்ஷ்டத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அனைவரும் ஏதாவது அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்து வருவது இயல்பு.
ஒவ்வொரு கிரகமும் சில பொருட்களில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும். அந்த பொருளில் அந்த கிரகத்தின் கதிர்வீச்சு மிகுந்து இருக்கும். கிரகங்களின் சக்தியை அதிகப்படுத்தவும் குறைக்கவும் இதை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சூரியன்
இரத்தினம் : மாணிக்கம்
உலோகம் : தாமிரம்
சமித்து :எருக்கு
தானியம் :கோதுமை
சந்திரன்
இரத்தினம் : முத்து
உலோகம் : ஈயம்
சமித்து : பலாசு
தானியம் :நெல்
செவ்வாய் கிரகம்
இரத்தினம் : பவளம்
உலோகம் : செம்பு
சமித்து :கருங்காலி
தானியம் :துவரை
புதன்
இரத்தினம் : மரகதம்
உலோகம் : பித்தளை
சமித்து :நாயுருவி
தானியம் :பச்சைபயிறு
குரு கிரகம்
இரத்தினம் : புஷ்பராகம்
உலோகம் : தங்கம்
சமித்து :அரசு
தானியம் :கொண்டை கடலை
சுக்கிரன்
இரத்தினம் : வைரம்
உலோகம் : வெள்ளி
சமித்து :அத்தி
தானியம் :மொச்சை
சனி கிரகம்
இரத்தினம் : நீலக்கல்
உலோகம் : இரும்பு
சமித்து :வன்னி
தானியம் :எள்
இராகு
இரத்தினம் : கோமேதகம்
உலோகம் : கருங்கல்
சமித்து :அருகு
தானியம் :உளுந்து
கேது கிரகம்
இரத்தினம் : வைடூரியம்
உலோகம் : துருக்கல்
சமித்து :தர்ப்பை
தானியம் :கொள்ளு
பலன் தருமா ? கட்டாயம் இவை பலன் தரும்.
உதாரணத்திற்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு அவரது தாயார் எப்படி உதவி புரிகிறாரோ அதே போல் இவை நம் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும். அதாவது நன்றாக படிக்கும் மாணவனுக்கு டியூஷன் வைத்தால் அவனுடைய தேர்ச்சி விகிதம் சில சதவீதம் உயரும். அதே போல் படிக்காத மாணவன் டியூஷன் படித்தால் அதிக மதிப்பெண் பெறாவிட்டாலும் தேர்ச்சியாவது பெற்றுவிடுவான்.
எதற்கும் லாயக்கு அற்ற மாணவர்கள் பள்ளிக்கும் போகமாட்டார்கள் டிவிஷனுக்கும் போகாமல் கெட்ட சகவாசத்தால் தோல்வி அடைவார்கள். அதாவது ஒருவருக்கு நல்ல தசா நிகழ்ந்தால் அவருக்கு கிடைக்க போகும் வெற்றியின் அளவை மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அதிகப்படுத்தும். சிறிது கெடுதலான தசாபுத்தி நடைபெறும் போது மேற்கண்ட பொருட்களை பயன்படுத்தினால் கெடுபலன் குறைந்து சிறு வெற்றியை தரும்.
மிகமிக மோசமான தசா புத்தி நிகழும் போது அவர் இதை பயன்படுத்தமுடியாது. தவறான ஒன்றை பயன்படுத்தி தன் முன்னேற்றத்தை தானே கெடுத்து கொள்வார்கள். அவர்கள் தவறான கற்களை உலோகங்களை பயன்படுத்தி தோல்வியை தழுவுவார்கள்.
எப்படி பயன்படுத்துவது?
யோகம் தரும் நிலையில் உள்ள கிரகத்தின் பொருட்களை உபயோகத்து யோகத்தை அதிகப்படுத்தலாம்.
அவயோகம் தரும் நிலையில் ஒரு கிரகம் நின்றால் சம்மந்த பட்ட கிரக ஆதிக்கமுடைய பொருளை தானம் செய்து அவயோகத்தை குறைக்கலாம்.
அவயோக தரும் கிரகத்தின் ஆதிக்க முடைய பொருளை உபயோகித்தால் அவயோகம் அதிகரித்தே தீரும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டே இதை முடிவு செய்ய இயலும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·