·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வெற்றிலையைப் பற்றிய சில சுவையான தகவல்கள்

நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.

மரத்தின் மீது ஏறி படரும் கொடியான வெற்றிலையை அகத்திக்கீரையோடு ஊடு பயிராகப் பயிரிடுவது நம்மவர்களின் வழக்கம். வெற்றிலையின் தாவரப்பெயர் "Piper betle" என்பதாகும். ஆங்கிலத்தில் "Betel pepper " என்பர். தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியில் பல்வேறு பெயர்களை வெற்றிலை பெற்றுள்ளது.
தமிழில் வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு பொருளின் பெயரிலேயே அதன் தன்மையைப் பொதிந்து வைப்பது தமிழர்கள் வழக்கம். அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தத்தக்க சிறந்த மூலிகையான வெற்றிலைக்கும் சுவாரஸ்யமான காரணத்தால்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.
எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத் தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு வெற்றி + இலை என்று பெயர் சூட்டியுள்ளார்களோ என்று எண்ணுமளவிற்கு  மகத்தான பலன்கள் கொண்டது வெற்றிலை!.[ இலக்கண ரீதியாக, வெறுமை + இலை எனப் பிரியும் . மையீற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி.]
இதற்கு இதிகாச ரீதியாகவும் ஓர் ஆதாரம் சொல்லலாம். இராமாயணத்தில் சீதையின் பாதம் பணிந்து அனுமன் வணங்கும் காட்சி ஒன்று உண்டு. அப்போது அருகிலிருந்த வெற்றிலைக்கொடியில் இருந்து சில வெற்றிலைகளைப் பறித்து அனுமனைச் சீதா தேவி வாழ்த்தியதாக செய்தி உண்டு. இதனால் வெற்றி தரும் இலை என்றும், புனிதத்தன்மை கொண்டதாகவும் சநாதனிகள் கருதுகிறார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெற விரும்பு
கிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிந்து வணங்குவதன் பின்னாலும் இந்த காரணம் உண்டு.
வெற்றிலையின் வகைகள்:
நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் வெற்றிலை மூன்று வகையாகப் பிரித்து அறியப்படுகிறது. குறைந்த மணமும் சற்று வெளிர் நிறமும், மிதமான காரச்சுவை உடையதையே பொதுவாக ‘வெற்றிலை’ என்று அழைக்கிறோம். இதுதவிர்த்து சற்று கருமை நிறமும் மிகுந்த காரமும் உடையதை ‘கம்மாறு வெற்றிலை’ என்றும், சிறிது கற்பூர மணமும் நடுத்தர காரமும் உடையதை ‘கற்பூர வெற்றிலை' என்றும் அழைக்கிறோம்.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்:
வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டும் இன்றி உள்ளுறுப்புகளான பல்வேறு சுரப்பிகளையும் தூண்டி நன்கு செயல்பட வைக்கும் மூலிகை ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவைச் சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தைச் சீர்படுத்தக்கூடியதும் ஆகும். மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக்களை ஒழுங்காக செயல்பட வைக்கும் குணமும், காயங்களையும் புண்களையும் சீழ்பிடிக்காமல் ஆற்றக்கூடிய திறனும் வெற்றிலைக்கு உண்டு.
வெற்றிலை எண்ணெய்:
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒருவிதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டுவிட்டு முறையாக வலிக்கிற கடும் வயிற்றுவலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ் பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்குச் சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும். வெற்றிலைக் கொடியில் வளரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக்கூடியது.
வெற்றிலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
நீர்ச்சத்து - 90%, 
புரதச்சத்து - 3.5%, 
கொழுப்புச்சத்து - 1.9%, 
தாது உப்பு - 3.3%, 
நார்ச்சத்து - 2.3%, 
பச்சையம் - 0.25%, 
மாவுச்சத்து - 6.10%, 
நிகோடினிக் அமிலம் - 0.89 மி.கி./100 மி.கி., வைட்டமின் சி - 0.01,
 வைட்டமின் ஏ - 2.9 மி.கி., 
தயாமின் - 10 கி/100கி,
 ரிபோஃப்ளேவின் - 100 கிராம், 
நைட்ரஜன் - 7.0%,
 பாஸ்பரஸ் - 0.6%, 
பொட்டாசியம் - 4.6%, 
கால்சியம் - 0.2%, 
சத்தூட்டம் - 44 கலோரி/100 கிராம், இரும்புச்சத்து - 0.007%, 
டானின் என்னும் நிறமி - 1.3% என ஒரு மருத்துவச் சாலையையே உள்ளடக்கியுள்ளது வெற்றிலை.
வெற்றிலையின் மருத்துவப் பலன்கள்:
தாம்பூலம் தரிப்பது என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டு மெல்வது ஆகும். அதனின்று வரும் உமிழ்நீர் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் சீரணத்தையும் துரிதப்படுத்தும்.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அந்தி சந்தி என இருவேளை பருகி வரும்போது நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெறலாம்.
வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.
 தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.
வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் மூட்டுக்கள் வீக்கமுற்று வலிக்கிறபோதும் மேல் பற்றாகப் போட விரையில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.
வெற்றிலை பற்றிய அகத்தியர் பாடல்:
‘ஐயம் அறுங்காண் அதன்சாரங் கொண்டக்காற்
பையச் சயித்தியம்போம் பைக் கொடியே - மெய்யின்
கடியின் குணம்போகும் காரவெற்றி லைக்குப்
படியுமுத் தோடமிதைப் பார்.’
"ஐயம் என்னும் சீதள நோய்களை வெற்றிலை போக்கும். காதின் உள்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் கண்டு மிக்க வேதனை தரும் சயித்தியம் என்னும் நோய் வெற்றிலையால் குணமாகும். மேலும், வண்டுக்கடி முதலான விஷக்கடிகள் அத்தனையும் வெற்றிலையை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் தடவுவதால் குணமாகும். வாத, பித்த, சிலேத்துமங்களால் வருகிற அனைத்து முத்தோஷ நோய்களும் வெற்றிலையால் போகும்" என்பது மேற்கண்ட பாடலின் விளக்கம் ஆகும்.
வெற்றிலை மருந்தாகும் விதம்:
 வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி, அடுக்காக ஒன்றின்மேல் ஒன்றாக மார்பின் மேல் வைத்துக்கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காதபோது பால் கட்டிக்கொண்டு மிக்க வேதனை தரக்கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
தலை பாரம் கண்டு தலைவலி ஏற்படும்போது வெற்றிலைச்சாற்றை 3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பாரம் குறையும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்டபோது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.
 சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தை யின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
 இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்துக் கொடுக்க செரியாமை நீங்கும். 50 மி.லி. தேங்காய் எண்ணெயில் 6 வெற்றிலையைப் போட்டு கொதிக்கவிட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின்மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.
 வெற்றிலைச்சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகி வர சிறுநீர் நன்கு வெளியேறும்.
 மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் ஒருமுறை பருகிவர நரம்புகள் பலம் பெறும்.
 வெற்றிலையைக் கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுவெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டி வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது தணலில் காட்டி கசக்கிப்பிழிய வருகிற சாற்றினில் பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், குணமாகும். நெஞ்சுச்சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.
வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது என்பதாலும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது என்பதாலும் வெற்றிலையை மைய அரைத்து கீல்வாதம்(ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்) விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக்கட்டலாம்.
 வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாகப் போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.
 வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்து விழுங்க பாடகர்களின் தொண்டை வெண்கலத்தைப்போல ஒலியைப் பெருக்கும்.
வெற்றிலைச்சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.
 திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.
பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.
வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
 இரவு படுக்கும்முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.
முக்கியக் குறிப்பு:
மருந்தாக வெற்றிலையைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம்.
  • 388
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங