-
- 3 friends

இன்றைய ராசி பலன் – நவம்பர் 27, 2023
இன்றைய ராசி பலன் – நவம்பர் 27, 2023
தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி | |
மேஷம் Aries
| தன, தான்ய விருத்திக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதத்திற்குப் பின்பே கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை |
ரிஷபம் Taurus | பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கால்நடைகள் விஷயத்தில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்குப் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு |
மிதுனம் Gemini | உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். முன்கோபமின்றி சூழ்நிலை அறிந்து செயல்படவும். தம்பதியர்களுக்கு இடையே புரிதல் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இசை சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்குப் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
கடகம் Cancer | உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை |
சிம்மம் Leo | பேச்சுக்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். இரக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு |
கன்னி Virgo | மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
துலாம் Libra | குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
விருச்சிகம் Scorpio
| நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
தனுசு Sagittarius | கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
மகரம் Capricorn | உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். இழுபறியான கடன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மன உளைச்சல்கள் ஏற்படும். பிடிவாத போக்கினை மாற்றிக் கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். மனதிற்குப் பிடித்த தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
கும்பம் Aquarius | வியாபாரப் பணிகளில் முதலீடு அதிகரிக்கும். புதுவிதமான அறிமுகங்களின் மூலம் உற்சாகமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
மீனம் Pisces | செய்யும் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அணுகுமுறைகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·