-
- 3 friends

குரு பகவானின் பொன்னான பார்வை இந்த 6 ராசிக்காரர்களுக்கு.....
குரு பகவான் மேஷ ராசியில் வலிமையான நிலையில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் கன்னி, விருச்சிகம் மகரம் ராசிக்காரர்களை பார்வையிடுகிறார். குரு பகவான் பார்வையால் 2024 ஆண்டில் வெற்றியை ருசிக்கப்போகும் 6 ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.
மேஷம்:
ஜென்ம குரு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் குரு பகவான் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் பொருளாதார விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்துச் செயல்படுங்கள். யாரையும் நம்பியும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்க வேண்டாம். அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுப்பும் சலிப்பும் ஏற்படும் என்பதால் உற்சாகமாக செயல்படுங்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். வெற்றிகள் குவியும். இழுபறியாக இருந்த சொத்துகள் கைக்கு வரும். வீட்டில் வசதிகள் பெருகும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்குசெல்லப் போவதால் பண வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்:
ஒன்பதில் குரு ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு. நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும் பாக்கியங்கள் உங்களை தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம், வெளிநாட்டு யோகம் என அனைத்து விதத்திலும் அற்புதமான யோகங்கள் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையால் திடீர் பண வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கும். சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். 2024ஆம் மே மாதத்திற்கு பிறகு பத்தாம் வீட்டில் குரு பதவி யோகத்தை தரப்போகிறார்.
கன்னி:
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். தனது பொன்னான பார்வையால் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
துலாம்:
களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் குரு பயணம் செய்கிறார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவு வரும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசியமில்லாத வெளியூர் பயணங்களை தள்ளிப்போடுங்கள்.
விருச்சிகம்:
2024ஆம் ஆண்டு முதல் குரு பகவான் களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பார்வையால் தொட்டது துலங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருச்சி சென்று சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தால் நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு:
குரு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதுடன் அவரது பார்வையும் கிடைப்பதால் தனுசு ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும் எதிர்பார்ப்பை விட கூடுதலாகவே நடக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமணம், சுபகாரியம் அற்புதமாக நடக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் தேடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் வரும். அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மகரம்:
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வீடு, இடம் மாற்றம் உண்டாகும். அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஏழரை சனியால் சிரமப்பட்டாலும் குரு பகவானின் பார்வை குதூகலத்தை தரப்போகிறது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·