-
- 3 friends

2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் - கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?
தெரிந்து கொள்வோமா?
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. 6ஆம் வீட்டில் சனி அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். விபரீத ராஜயோகம் தரப்போகிறது. பணம் வந்து கொண்டே இருக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 9ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
கோடி கோடியாக பணம்: கேட்டது எல்லாம் கிடைக்கப்போகிறது. பாக்ய குரு நிறைய பாக்யங்களை தரப்போகிறார். கோடி கோடியாக பணம் திரும்ப வரப்போகிறது. பெட்டிகளில் சேமித்து வைக்க தயாராகுங்கள். குரு பகவான் பார்வையும் உங்கள் ராசியின் மீது விழுவதோடு மூன்றாம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டின் மீது விழுகிறது.
குரு பார்வை பலன்: புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளால் சுப காரியம் நடைபெறும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிரகங்கள் உங்களுக்கு சாதகமாகவே உள்ளதால் நன்றாக இருப்பீர்கள். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சினை தீரும்: எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். யாருக்காகவோ பட்ட கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொல்லைகள் நீங்கும். ராஜாதி ராஜ யோகம் தேடி வரப்போகிறது. வேலை மாற்றம் வரப்போகிறது. கை நிறைய சம்பளம், புரமோசனுடன் கூடிய வேலை மாற்றம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
நோய்கள் நீங்கும்: உங்களை பாடாக படுத்தி எடுத்த நோய்கள் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும் ஆரோக்கியம் மேம்படும். மன உளைச்சல் நீங்கப்போகிறது மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு பதக்கங்கள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடப்போகிறது. புகழ் வெளிச்சத்தில் நனையப்போகிறீர்கள்.
ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்வதால் கூட்டுத்தொழில் லாபத்தை தரும். குடும்பத்தில் சில சங்கடங்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நெருக்கடிகள் நீங்கும். யாரை நம்பியும் பணத்தை பெரிய அளவில் முதலீடு செய்யாதீர்கள்.
கேது உங்கள் ராசியில் நிற்பதால் பழைய கடன்கள் அடைபடும். அதே நேரத்தில் பண விசயத்தில் கவனம் தேவை.பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். சொத்து விற்பனை மூலம் கோடிக்கணக்கில் பணம் தேடி வரும். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் மிளகு தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·