-
- 3 friends
இன்றைய ராசி பலன் – நவம்பர் 19, 2023
இன்றைய ராசி பலன் – நவம்பர் 19, 2023
தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 3 ஆம் திகதி | |
மேஷம் Aries
| உறவுகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் |
ரிஷபம் Taurus | கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாகச் செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை |
மிதுனம் Gemini | பேச்சுக்களில் கனிவு வேண்டும். சிக்கலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். முக்கிய கோப்புகளில் அலட்சியமின்றி செயல்படவும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
கடகம் Cancer | உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். சில பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வர்த்தகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு |
சிம்மம் Leo | சாமர்த்தியமாகப் பேசி நினைத்ததை முடிப்பீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் ஏற்படும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு |
கன்னி Virgo | வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் மேம்படும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். நுட்பமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீலம் |
துலாம் Libra | திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
விருச்சிகம் Scorpio
| மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவீர்கள். பாகப்பிரிவினைகள் லாபகரமாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். அலுவல் பணிகளில் திறமைகள் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் |
தனுசு Sagittarius | குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். பழைய பிரச்சனைகள் குறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் அமையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு |
மகரம் Capricorn | மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே வேலைகளை செய்து முடிப்பது நல்லது. உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். நண்பர்களின் சந்திப்புகளால் சில மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். புதிய நபர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகப் பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் |
கும்பம் Aquarius | கடன் சார்ந்த நெருக்கடிகள் விலகும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார முதலீடுகள் மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதுவிதமான சூழல் நிலவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் |
மீனம் Pisces | மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் பிறக்கும். உத்தியோகத்தில் உயர் பொறுப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் மதிப்பு கூடும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·